(து - ம்.) என்பது, தோழி தலைமகளை அறத்தொடு நிற்கும்படி கூறி உடன் படுத்தியதுமாகும் (உரை இரண்டிற்கு மொக்கும்.)
(இ - ம்.) இதனை, "நாற்றமும் தோற்றமும்" (தொல். கள. 23) என்னும் நூற்பாவின்கண், "வகை" என்பதனாற் கொள்க.
| பொன்செய் வள்ளத்துப் பால்கிழக் கிருப்ப |
| நின்னொளி ஏறிய சேவடி ஒதுங்காய் |
| பன்மாண் சேக்கைப் பகைகொள நினைஇ |
| மகிழா நோக்கம் மகிழ்ந்தனை போன்றனை |
5 | எவன்கொல் என்று நினைக்கலும் நினைத்திலை |
| நின்னுள் தோன்றுங் குறிப்புநனி பெரிதே |
| சிதர்நனை முனைஇய சிதர்கால் வாரணம் |
| முதிர்கறி யாப்பின் துஞ்சும் நாடன் |
| மெல்ல வந்து நல்லகம் பெற்றமை |
10 | மையல் உறுகுவள் அன்னை |
| ஐயம் இன்றிக் கடுங்கூ வினளே. |
(சொ - ள்.) பொன் செய் வள்ளத்துப் பால் கிழக்கு இருப்ப - தோழீ! பொன்னாற் செய்த கிண்ணத்துள் வைத்த பால் நின்னால் உண்ணப்படாமல் கீழே வைத்திருக்கின்றமை காணாய;் நின் ஒளி ஏறிய - நின் மேனியின் ஒளிமிக்கு வேறு வண்ணமாகத் தோன்றுவ; சே அடி ஒதுங்காய் - அன்றி மெல்ல நின் சிவந்த அடிகளால் நடந்து இயங்கினாயுமல்லை; பல் மாண்