பக்கம் எண் :


52


  
"அறக் கழிவுடையன பொருட்பயம் படவரின்  
  
 வழக்கென வழங்கலும் பழித்தன் றென்ப" 

என்னும் வழுவமைதியானே அமைத்துக் கொள்க.

    இனி இந்தச் செய்யுளை "அருமை செய்து அயர்ப்பினும்" (தொல்-கள- 20) என்னும் விதிபற்றித் தலைவன் பிரிவினை ஆற்றாத தலைவி தோழிக்குக் கூறியது எனக் கொள்ளினுமாம்.

(28)
  
    திணை : பாலை.

    துறை : இது, மகட்போக்கிய தாய் சொல்லியது

    (து - ம்.) என்பது, தலைமகளைத் தலைமகன் கொண்டுதலைக்கழிந்தமை கேட்ட செவிலி புலம்பிப் பின்பு நற்றாய்க்குக் கூற அவ்வீன்றதாய் அஃது அறத்தாறெனக் கொண்டாளாயினும் பண்டு என்னைச் சிறிது பொழுது பிரியினும் நொந்து புலக்குநள் எவ்வாறு அஞ்சாது பாலைநிலத்திற் செல்லுவள்கொலென மகளது அச்சத்தன்மை முதலாயவற்றுக் கச்சமுற்றிரங்கிக் கூறாநிற்பது.

    (இ - ம்.) இதனை, "தன்னு மவனு மவளுஞ் சுட்டி" (தொல்-அகத்- 39.) என்னும் நூற்பாவின்கண் "அச்சம்" பற்றி நற்றாய் கூறியதென அமைத்துக் கொள்க. அச்சம் இருவகைத்து : தலைவி தான் செல்லும் பாலையின்கண் விலங்கும் புள்ளும் ஆறலைப்போரும் முதலிய கண்டு அஞ்சும் அச்சமும், தந்தை தன்னையர்பின் சென்றவர் இஃதறமென்னாது தீங்கு செய்கின்றாரோ என்று அஞ்சும் அச்சமும் என்பனவாம். இவற்றுள் இது முன்னது,

    
நின்ற வேனி லுலந்த காந்தள்  
    
அழலவிர் நீளிடை நிழலிடம் பெறாஅது  
    
ஈன்றுகான் மடிந்த பிணவுப்பசி கூர்ந்தென 
    
மான்ற மாலை வழங்குநர்ச் செகீஇய 
5
புலிபார்த் துறையும் புல்லதர்ச் சிறுநெறி 
    
யாங்குவல் லுநள்கொல் தானே யான்றன் 
    
வனைந்தேந் திளமுலை நோவ கொல்லென 
    
நினைந்துகைந் நெகிழ்ந்த வனைத்தற்குத் தான்றன் 
    
பேரமர் மழைக்க ணீரிய கலுழ 
10
வெய்ய வுயிர்க்குஞ் சாயன் 
    
மையீ ரோதிப் பெருமடத் தகையே. 

    (சொ - ள்.) தன் வனைந்து ஏந்து இளமுலை நோவகொல் என - அவளுடைய தொய்யில் வனைந்து பருத்த இளைய கொங்கைகள் நோவனவோ என்று; யான் நினைந்து கை நெகிழ்ந்த அனைத்தற்கு - யான்