பக்கம் எண் :


57


யான் அன்னையின் கடுஞ்சொல் கேட்குந்தொறும் வெருவா நின்றேனென்றதாம்.

    இறைச்சி :- இறாமீனைப் பிடித்து வந்த காக்கை தன் பெடையை விளித்து அதன் வாயில் இரையைக்கொடுக்குந் துறையையுடையவனாயிருந்தும் தலைவன் என்னையழைத்து முயங்கி இன்பமுய்த்தானிலன்; இஃதிருந்தபடி யென்னையென்றதாம். மெய்ப்பாடு - அழுகை. பயன் - அயாவுயிர்த்தல்.

    (பெரு - ரை.) அவன் என்னைக் கலந்து கைவிட்ட பின்பு முன்னர் இனிதாயிருந்த அத்துறையும் வெறுப்புடைத்தாயிற்று; என்பதும், ஆதலால் அவன் பிரிந்ததனாலாகிய துன்பம் என்பதும் குறிப்பெச்சப் பொருள்கள்.

(31)
  
    திணை : குறிஞ்சி.

    துறை : இது தலைவிக்குக் குறைநயப்புக் கூறியது.

    (து - ம்.) என்பது, பாங்கியிற்கூட்டத்துத் தலைமகனுக்குக் குறைநேர்ந்த தோழி தலைவியை மெலிதாகச் சொல்லிக் குறையறிவுறுத்தலும் அவள் அறியாள் போலுதலின் வலிதாகக் கூறிக் குறைநயப்பிக்கத் தொடங்கி அத்தோன்றல் படுந்துயரை யான் கூற நீ தெளிந்திலை; வேறு தோழியரோடேனும் ஆராய்ந்து தக்கது செய்யெனப் புலந்து கூறாநிற்பது.

    (இ - ம்.) இதனை, "மறைந்தவளருகத் தன்னொடு மவளொடு முதன்மூன் றளைஇப் பின்னிலை நிகழும் பல்வேறு மருங்கினும்" (தொல்-கள்- 23) என்பதன்கண் அமைத்துக்கொள்க.

    
அண்ணாந் தேந்திய வனமுலை  
    
மாயோ னன்ன மால்வரைக் கவாஅன் 
    
வாலியோ னன்ன வயங்குவெள் ளருவி 
    
அம்மலை கிழவோன் நந்நயந் தென்றும் 
    
வருந்தின னென்பதோர் வாய்ச்சொல் தேறாய் 
5
நீயுங் கண்டு நுமரொடும் எண்ணி 
    
அறிவறிந் தளவல் வேண்டு மறுதரற்கு 
    
அரிய வாழி தோழி பெரியோர் 
    
நாடி நட்பி னல்லது 
    
நட்டு நாடார்தம் ஒட்டியோர் திறத்தே 

    (சொ - ள்.) தோழி வாழி மாயோன் அன்ன மால்வரைக் கவாஅன் வாலியோன் அன்ன வயங்கு வெள் அருவி - தோழீ ! வாழி ! மாயோனைப் போன்ற பெரிய மலைப்பக்கத்து அவன் கண்ணனாயவதரித்த பொழுது அவனுக்கு முன்னவனாகத் தோன்றிய வெளிய நிறத்தையுடைய பலதேவனைப் போன்ற விளங்கிய