(து - ம்.) என்பது, தோழி பகற்குறி வந்து நீங்குந் தலைமகனை நெருங்கி இறைவியை யான் அயாவோம்புவேனென் றெண்ணியோ நீ கவலையடையாது செல்கின்றனை? யான் ஆற்றுவிக்குமிடத்து அவள் கவலைகொண்டால் நீயே வந்து ஆற்றுவிக்கவேண்டுமென்கின்றாள்; என் தோழி உன்னோடாடியதாலே சிலம்பு உடைந்துபோகியது கண்டாய், அது கம்மியன் இணைப்பதற்குமேலே மண்கட்டவேண்டியதாதலின் அவன் எடுக்குந் துறைமணல் கொடுவருவாயாகவென்று கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை, "களனும் பொழுதும் . . . . . அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்" (தொல். கள. 23) என்னும் விதியினாற்கொள்க.
துறை : (2) கையுறை நேர்ந்த தோழி தலைமகட்குக் கையுறை உரைத்ததூஉமாம்.
(து - ம்.) என்பது, வெளிப்படை.
(இ - ம்.) இதனை, "மறைந்தவள் அருக .. . . . . பின்னிலை நிகழும் பல்வேறு மருங்கினும்" (தொல். கள. 23) என்பதனாற் கொள்க.
| கண்டல் வேலிக் கழிசூழ் படப்பைத் |
| தெண்கடல் நன்னாட்டுச் செல்வன் யானென |
| வியங்கொண்டு ஏகினை யாயின் எனையதூஉம் |
| உறுவினைக் கசாவா உலைவில் கம்மியன் |
5 | பொறியறு பிணைக்கூட்டுந் துறைமணல் கொண்டு |
| வம்மோ தோழி மலிநீர்ச் சேர்ப்ப |