(து - ம்.) என்பது, பரத்தையிற் பிரிந்துவருகின்ற தலைவனது வரவறிந்த தலைவி ஊடினாளை நயந்து பலகால்வேண்டியும் ஊடல் நீங்காமையால் வருந்திய அவன், ஆங்கு வந்த பாணனை நோக்கிப் பாணனே! நம் காதலி புதல்வனைப் பெற்றகாலத்து நாம் அருகெய்தி வினாயபொழுது நகைகொண்டு கண்ணைமூடியதை நினைக்குந்தோறும் நகாநிற்போம்; அத்தகையாள் இப்பொழுது ஊடியிருப்பது காணென்று நொந்து கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கு, "ஏனை வாயில் எதிர்" (தொல். கற். 5) என்னும் விதிகொள்க.
துறை : (2) முன் நிகழ்ந்ததனைப் பாணற்குச் சொல்லியதூஉமாம்.
(து - ம்.) என்பது, வெளிப்படை.
(உரை குறிப்பெச்சமில்வழி ஒக்கும்.) (இ - ம்.) இதுவுமது.
| வாராய் பாண நகுகம் நேரிழை |
| கடும்புடைக் கடுஞ்சூல் நங்குடிக்கு உதவி |
| நெய்யோடு இமைக்கும் ஐயவித் திரள்காழ் |
| விளங்குநகர் விளங்கக் கிடந்தோட் குறுகிப் |
5 | புதல்வன் ஈன்றெனப் பெயர்பெயர்த்து அவ்வரித் |
| திதலை அல்குல் முதுபெண் டாகித் |
| துஞ்சுதி யோமெல் அஞ்சில் ஓதியெனப் |
| பன்மாண் அகட்டிற் குவளை ஒற்றி |
| உள்ளினென் உறையும் எற்கண்டு மெல்ல |
10 | முகைநாள் முறுவல் தோற்றித் |
| தகைமலர் உண்கண் புதைத்துவந் ததுவே. |