(து - ம்,) என்பது, களவின் வழிவந் தொழுகுந் தலைமகன் ஒருபுறம் வந்து வைகினான். அதனை அறிந்து விரைய வரைவொடு புகும்வண்ணம் தோழி, தலைவியை நெருங்கித் தோழீ! யாமம் முதலாயின வருத்தாநிற்ப; இன்னும் ஞாயிறு தோன்றினபாடில்லை; முன்பு சேர்ப்பனொடு ஆராயாது செய்த நட்பின் அளவானது ஏதிலாட்டியர் அலர் தூற்றுமாறு இவ் வண்ணம் ஆயிற்றுக்காண் என்று வருந்திக் கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை, "களனும் பொழுதும் . . . . . . . . . அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்" (தொல். கள. 23) என்பதனாற் கொள்க.
துறை : (2) தலைமகன் ஒருவழித் தணந்த பின்னை வன்பொறை எதிர்மொழிந்ததூஉமாம்.
(து - ம்,) என்பது, தலைமகன் ஒருவினை மேலிட்டுப் பிரிந்து போகியபின் வருந்திய தலைமகளைத் தோழி, வலிதிற் பொறுத்திருவென்றாட்கு