பக்கம் எண் :


662


வேண்டி யான் இயற்பழித் துரைப்பக் கேட்டு ஆற்றாத தலைமகன் நின்பால் அன்பு கொண்டு நமர்பெறுமாறு முன்றிலிற் குவித்த நிதியமுங் கலனும் எங்குஞ் சுடரொளி வீசாநின்றன வென்றதாம். மெய்ப்பாடு - உவகை. பயன் - கேட்ட தலைவி மகிழ்தல்.

     (பெரு - ரை.) வாலா வேழம் - வாலாமையுடைய வேழம். அணித்தாகப் பிடி கன்றீன்றமையின் களிறு வாலாமையுடைத் தாயிற்று என்றபடியாம். 'நிலைகிளர் மீனின் தோன்றும்' என்றும் பாடம். இதுவே சிறந்த பாடமாம். 'தன் நிலையிலே ஒளி வீசுகின்ற விண்மீன் போலத் தோன்றும்" என்றவாறு.

     இனித் தினைகவர்ந்த களிற்றின்மேல் கானவன் எறிந்த ஞெகிழி ஒளியுடைய விண்மீன் போலத் தோன்றும் என்றது வரைவுகடாதற் பொருட்டு நாம் நம் பெருமான் திறத்துக் கூறிய சுடுசொல்லின் பயன் எல்லோரும் மகிழும் வரைவாகிவிட்டது என்னுங் குறிப்புடையது எனினுமாம்.

(3")
  
     திணை : முல்லை.

     துறை : (1) இது, வினைமுற்றி மறுத்தரா நின்ற தலைமகனை இடைச் சுரத்துக் கண்டார் சொல்லியது.

     (து - ம்,) என்பது, சென்று வினைமுடித்து வருந் தலைமகனை இடைச்சுரத்து முன்னும் பின்னும் நோக்கி நின்றவர்களுள் ஒருவர் நோக்கி, 'முன்பு இவன் இச் சுர நெறியின் கண்ணே ஆழியதிர முன் பனி நாளிற் சென்றனன்; இப்பொழுது கார்ப்பருவம் வரலாயதே யெனக் குளிர்ந்த வுள்ளத்தனாகி மீளா நின்றனன். இவன் வாழ்வானாக; இதற்கு யான் மகிழ்வேன் மன்னோ' என மகிழ்ந்து கூறாநிற்பது.

     (இ - ம்.) இதனை, ''மரபுநிலை திரியாவாகி விரவும் பொருளும் விரவு மென்ப'' (தொல். அகத். 45) என்னும் நூற்பாவிற் கொள்க.

     திணை : குறிஞ்சி.

     துறை : (2) வன்சொல்லாற் குறை நயப்பித்த தோழி, தான் தனித்துக் கூறியதுமாம்.

     (து - ம்,) என்பது, வெளிப்படை.

     (இ - ம்.) இதற்கு, ''நன்னயம் பெற்றுழி நயம்புரி யிடத்தினும்'' (தொல். கள. 23) என்னும் விதிகொள்க.

    
மரந்தலை மணந்த நனந்தலைக் கானத்து 
    
அலந்தலை ஞெமையத்து இருந்த குடிஞை 
    
பொன்செய் கொல்லனின் இனிய தெளிர்ப்பப் 
    
பெய்ம்மணி ஆர்க்கும் இழைகிளர் நெடுங்தேர் 
5
வன்பால் முரப்பின் நேமி அதிரச் 
    
சென்றிசின் வாழியோ பனிக்கடு நாளே