(து - ம்.) என்பது, களவொழுக்கத்து, அணித்தான ஓரிடத்திலே தலைவன் வந்திருப்பதை யறிந்த தோழி, அவன் கேட்டலும் விரைய வரைந்து கொள்ளுமாற்றானே தலைவியை நோக்கி, நமக்குண்டாகிய பழிச்சொல்லை அன்னை யறிந்தால் இற்செறிப்பாளென்று தலைவர்பாற் கூறின், அவர் நம்மைத் தம்மூர்க்குக் கொண்டுபோவரோ எனக் கவன்று கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை, "ஆற்றது.....அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்" (தொல்-கள- 23) வகை என்பதன்கண் அமைத்துக் கொள்க.
| கானலஞ் சிறுகுடிக் கடல்மேம் பரதவர் |
| நீனிறப் புன்னைக் கொழுநிழ லசைஇத் |
| தண்பெரும் பரப்பின் ஒண்பதம் நோக்கி |
| யங்கண் அரில்வலை உணக்குந் துறைவனொ |
5 | டலரே, அன்னை யறியின் இவண்உறை வாழ்க்கை |
| அரிய வாகும் நமக்கெனக் கூறிற் |