(து - ம்,) என்பது, தலைமகன் ஒரு சிறைப்புறமாக வந்திருப்பதனை யறிந்த தோழி அவன் விரைவில் வரையுமாறு தலைவியை நெருங்கித் "தோழீ! தினை கொய்யும்பதங் கொள்ளும்; அதனால் நாம் மீண்டு மனையகம் புகுவேம் போலத் தோன்றா நின்றது; அங்ஙனமானால் நம்முடைய தடை நீக்கிச் சென்று முன்பு நம்மைக் கைவிட்ட காதலனை எவ்வாறு அணைகிற்போம் என நொந்து கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை, "களனும் பொழுதும் . . . . அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்" (தொல். கள. 23) என்னும் விதியாற் கொள்க.
| கருங்கால் வேங்கை நாளுறு புதுப்பூப் |
| பொன்செய் கம்மியன் கைவினை கடுப்பத் |
| தகைவனப்பு உற்ற கண்ணழி கட்டழித்து |
| ஒலிபல் கூந்தல் அணிபெறப் புனைஇக் |
5 | காண்டற் காதல் கைம்மிகக் கடீஇயாற்கு |
| யாங்கா குவங்கொல் தோழி காந்தள் |
| கமழ்குலை அவிழ்ந்த நயவருஞ் சாரல் |
| கூதள நறும்பொழில் புலம்ப ஊர்வயின் |
| மீள்குவம் போலத் தோன்றுந் தோடுபுலர்ந்து |
10 | அருவியின் ஒலித்தல் ஆனா |
| கொய்பதங் கொள்ளுநாங் கூஉந் தினையே. |
(சொ - ள்.) தோழி கொய் பதம் கொள்ளும் நாம் கூஉம் தினை - தோழீ! கதிர் கொய்யும் பதம் கொள்ளநின்ற நாம் கூவிக்