பக்கம் எண் :


74


எனினுமாம். இவ்வுரையாசிரியர் இசைநிறையாக்கினர். பாரமலி சிறுகூவல் என்பது பாஅர் மலி சிறுகூவல் என்றும் காணப்படுகின்றது.

(41)
  
    திணை : முல்லை.

    துறை : இது, வினைமுற்றி மீள்வான் தேர்ப்பாகற்குச் சொல்லியது

    (து - ம்.) என்பது, சென்று வினைமுடித்து மீண்டு குறித்த பருவத்து வருகின்ற தலைமகன், பாகனை நோக்கிப் பாகனே ! மழை பெய்ததும் தவளைக ளொலித்தலினாற் செல்லுகின்ற தேரின் மணியொலியை நம் காதலி யறிந்தில ளதனால், நீயிர் போய்த் தெரிவிப்பீரென இளையரை விடுத்தலும் அவர் சென்றறிவித்தனராக, உடனே அவள் நீராடித் தன்னைப் புனைந்து கொள்ளுந் தறுவாயில் யான் சென்றுட்புகநிற்ப ஆங்கு என்னை யணைத்து மகிழுநிலை மறத்தற்கரிது காணென முன்பொருகால் நிகழ்ந்ததனைக் கூறாநிற்பது.

    (இ - ம்.) இதற்கு "பேரிசை யூர்திப் பாகர் பாங்கினும்" (தொல்-கற்- 5) என்னும் விதி கொள்க.

    
மறத்தற் கரிதால் பாக! பன்னாள் 
    
வறத்தொடு பொருந்திய உலகுதொழிற் கொளீ இய 
    
பழமழை பொழிந்த 1புதுநீ ரவல  
    
நாநவில் பல்கிளை கறங்க2 நாவுடை 
5
மணியொலி கேளாள் வாணுதல் அதனால் 
    
ஏகுமின் என்ற இளையர் வல்லே  
    
இல்புக் கறியுந ராக மெல்லென 
    
மண்ணாக் கூந்தல் மாசறக் கழீஇச் 
    
சில்போது கொண்டு பல்குரல் அழுத்திய 
10
அந்நிலை புகுதலின் மெய்வருத் துறாஅ 
    
அவிழ்பூ முடியினள் கவைஇய 
    
மடமா அரிவை மகிழ்ந்தயர் நிலையே. 

    (சொ - ள்.) பாக பல் நாள் வறத்தொடு பொருந்திய உலகு தொழில் கொளீஇய - பாகனே ! நீரின்மையாலே கோடையில் பல நாளாக வறட்சியுற்ற உயிர்கள் மகிழ்ச்சியோடு தத்தந் தொழிலை மேற்கொண்டு நிகழ்த்துமாறு; பழ மழை பொழிந்த புது நீர் அவல நா நவில் பல் கிளை கறங்க - தொன்று தொட்டுப் பெய்யும் வழக்குப் போல மழை பெய்ததனாலாய புதிய நீர் நிரம்பிய பள்ளங்கடோறும் நாவினால் ஒலிக்கின்ற பலவாய

 (பாடம்) 1. 
புதுநீரரவத்து.
 2. 
மாண்வினை.