பக்கம் எண் :


115


     உலகம் பெறீஇயரோ அன்னை" (குறுந் - 83) எனவரும் குறுந்தொகைச் செய்யுளினுங் காண்க.

(65)
  
     திணை : பாலை.

     துறை : இது, மனைமருட்சி.

     (து - ம்.) என்பது, தலைவன் கொண்டுதலைக் கழிதலும் அவ்வுடன் போக்கினை யறிந்த நற்றாய் 'உண்மகிழ்வோடு அஃது அறனெனக் கொண்டிருந்தும் தனிமையில் வெஞ்சுரஞ்சென்றமை கருதி ஆற்றாளாய் என் மெல்லிய இளமகள் தன்னை விரும்பும் நல்ல காதலனைப் பெற்றனளாயினும், கொடிய சுரத்திற் செல்லுதலாலே மலர் போன்ற அவளுடைய கண்கள், சிவந்து ஒளி மழுங்கி யலமருங்கொல்'லென மனையகத்து மருண்டு வருந்திக் கூறாநிற்பது.

     (இ - ம்.) இதனை, "தன்னும் அவளும்" (தொல்-அகத்- 36) என்னும் நூற்பாவின்கண் அச்சம் என்பது பற்றி நற்றாய் கூறியது என்க.

    
மிளகுபெய் தனைய சுவைய புன்காய் 
    
உலறுதலை உகா அய்ச் சிதர்சிதர்த் துண்ட 
    
புலம்புகொள் நெடுஞ்சினை யேறி நினைந்துதன் 
    
பொறிகிளர் எருத்தம் வெறிபட மறுகிப் 
5
புன்புறா உயவும் வெந்துகள் இயவின் 
    
நயந்த காதலற் புணர்ந்தன ளாயினுஞ் 
    
சிவந்தொளி மழுங்கி அமர்த்தன கொல்லோ 
    
கோதை மயங்கினுங் குறுந்தொடி நெகிழினுங் 
    
காழ்பெய் அல்குற் காசுமுறை திரியினும் 
10
மாணலங் கையறக் கலுழுமென் 
    
மாயக் குறுமகள் மலரேர் கண்ணே. 

     (சொ - ள்.) மிளகு பெய்து அனைய சுவைய உலறு தலை உகா அய் புன்காய் - மிளகினை யிட்டுவைத்தாற் போன்ற சுவையுடைய காய்ந்த கிளைகளையுடைய உகாய் மரத்தினுள்ள புல்லிய காயை; சிதர் சிதர்த்து உண்ட புலம்பு கொள் புன் புறா வண்டுகள் நெருங்காதபடி போக்கி உண்டதனாலாகிய வருத்தமிக்க புல்லிய புறா; நெடு சினை ஏறி நினைந்து பொறிகிளர் தன் எருத்தம் வெறிபட மறுகி உயவும் - நெடிய கிளை மேலேறித் தான் தின்ற தவற்றைக் கருதி வரைகள் விளங்கிய தன் பிடரி சிலிர்த்துத் தின்ற வெறிப்பினால் மறுக்கமுற்று வருந்தாநிற்கும்; வெம் துகள் இயவில் நயந்த காதலன் புணர்ந்தனள் ஆயினும்