பக்கம் எண் :


559


துன்பமிகுதியைக் குறித்தது. பகற்குறிக் கண்ணே தலைவன் எளிதிற் காணும் நிலை நீங்கிக் காப்பிற்பட்டவளாதலின் அருங்காட்சிய மென்றாள்; அருங் காட்சியமென்றது, “அருங்கேடன்” (குறள், 210) என்றாற் போல நின்றது: காட்சி யரியமென்னும் பொருட்டு.

     போரின்பொருட்டு வளர்க்கப்பட்டு அப்போரில் ஊக்கமுடையாரால்உய்க்கப்படும் சேரிக்கோழியின் போர் பெருந்திரளான மக்கட்கிடையேநிகழும்; குப்பைக் கோழிப் போர் உய்ப்பாரும் களைவாரும் காண்பாரும்இலதாயிற்று.

     யான் உற்ற நோயைக் களைவாரில்லை யென்றது அங்ஙனம்களைவாரொருவரை வேண்டி நிற்றலைப் புலப்படுத்தியது; இதனால்அறத்தொடு நிற்றல் வேண்டுமென்பதைத் தோழிக்குத் தலைவிகுறிப்பித்தாள்.

     ஒப்புமைப் பகுதி 1. கண் தரவந்த காமம்: “கண்டாங் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய், தாங்காட்ட யாங்கண்டது”, “தெரிந்துணராநோக்கிய வுண்கண் பரிந்துணராப், பைத லுழப்ப தெவன்”, “கதுமெனத்தாநோக்கித் தாமே கலுழு, மிதுநகத் தக்க துடைத்து”, “பெயலாற்றாநீருலந்த வுண்க ணுயலாற்றா, உய்வினோ யென்க ணிறுத்து”, “படலாற்றாபைத லுழக்குங் கடலாற்றாக், காமநோய் செய்தவென் கண்’’, “ஓவினிதேயெமக்கிந்நோய் செய்தகண், தாஅ மிதற்பட்டது”, “உழந்துழந் துண்ணீரறுக விழைந்திழைந்து, வேண்டி யவர்க்கண்ட கண்” (குறள், 1171-7);“கருநெடுங் கண்டருங் காம நோயே” (நன். 403, சங்கர. மேற்.)

     காம எரி: “நீருட், குளிப்பினுங் காமஞ் சுடுமேகுன் றேறி, ஒளிப்பினுங் காமஞ் சுடும்” (நாலடி. 90); “காமநோய் போல, விடிற்சுடலாற்றுமோ தீ” (குறள், 1159); ‘‘காமக் கனலெரி” (பெருங். 1.33:203): “மொழிந்த காமக் கொடுங்கனன் மூண்டதால்’’ (கம்ப. சூர்ப்பநகைப். 72.)

     6. குப்பைக் கோழி: “குப்பை கிளைப்போவாக் கோழி” (நாலடி. 341): “குப்பை கிளைப்பறாக் கோழி போல்வர்”(பெருங். 3. 14:112)

(305)
  
(காப்பு மிகுதியால் வருந்திய தலைவி, வரையாது வந்தொழுகும்தலைவனிடத்துச் சிறிது வேறுபாடுடையளாகியும் அவ்வேறுபாடுஅவனைக் கண்டக்கால் மறைவதைத் தன் நெஞ்சை நோக்கிக் கூறுவாளாய்க் கூறியது.)
  306.    
மெல்லிய வினிய மேவரு தகுந 
    
இவைமொழி யாமெனச் சொல்லினு மவைநீ 
    
மறத்தியோ வாழியென் னெஞ்சே பலவுடன் 
    
காமர் மாஅத்துத் தாதமர் பூவின் 
5
வண்டுவீழ் பயருங் கானற்  
    
றண்கடற் சேர்ப்பனைக் கண்ட பின்னே  

என்பது காப்பு மிகுதியால் நெஞ்சுமிக்கது வாய் சோர்ந்து கிழத்தி உரைத்தது.