பக்கம் எண் :


571


வெனப்படும் (தொல். மெய்ப். 27, பேர்.) தான் வருந்திக் கூறுகின்றகூற்றினைத் தலைவியைச் சார்த்தித் தலைவன் கூறலின், இவ்வாறுஆற்றானாய் இங்ஙனம் கூறினானென்று அஞ்சித் தோழி உணராமல் தலைவி தானே கூடிய பொழுது தலைவன் கூறியது (தொல். களவு, 11. ந.);‘எஞ்ஞான்றும் கூட்டம் பெற்றமையால் தலைவி மகிழ்தல், இரண்டறிகள்வியென்னும் பாட்டினுள் தோற்றப்பொலிவை மறைப்பளெனத் தலைவன்கூறியவாற்றால் உணரப்படும் (தொல். களவு. 20, ந.)

     ஒப்புமைப் பகுதி 1. கள்வி: மணி. 18:121.

     3. கானத்தின் மணம் கூந்தல் மணத்திற்கு: (குறுந். 199:3-4, ஒப்பு.);

     "இமயக் கான நாறுங் கூந்தல்" (அகநா. 399: 2.)

     2-3. மலையன் முள்ளூர்: "பேரிசை முள்ளூர்ப், பலருடன் கழித்த வொள்வாண் மலையன்" (நற். 170:6-7); "செவ்வேல், முள்ளூர் மன்னன்கழறொடிக் காரி" (அகநா. 209:11-2); "மலையன், மகிழா தீத்தவிழையணி நெடுந்தேர், பயன்கெழு முள்ளூர் மீமிசைப், பட்ட மாரியுறையினும் பலவே", "பறையிசை யருவி முள்ளூர்ப் பொருந", "எள்ளறுசிறப்பின் முள்ளூர் மீமிசை, அருவழி யிருந்த பெருவிறல் வளவன், மதிமருள் வெண்குடை காட்டி யக்குடை, புதுமையி னிறுத்த புகழ்மேம்படுந" (புறநா. 123:3-6, 126:8, 174:13-6.)

     4. நள்ளென் கங்குல்: குறுந். 6:1, ஒப்பு, 160:4, ஒப்பு.

     6. நறுங்கதுப்பு: குறுந். 2:4-5, ஒப்பு.

     கதுப்பில் எண்ணெய் நீவுதல்: "எண்ணெயு நானமு மிவை மூழ்கி...... கடைகுழன்ற கருங்குழல்கள்" (சீவக. 164.)

     7. அமரா முகத்தள்: மலைபடு. 74; அகநா. 253:3.

     8. ஓரன்னள்: கலி. 23:9, 11, 13

(312)
  
(இரவுக்குறி வந்த தலைவன் சிறைப்புறமாக இருப்பத்தோழி,இயற்பழித்த விடத்துத் தலைவி "அவரது நட்பு என்றும் அழியாதது"என்று கூறியது.)
 313.    
பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை  
    
நீத்துநீ ரிருங்கழி யிரைதேர்ந் துண்டு  
    
பூக்கமழ் பொதும்பிற் சேக்குந் துறைவனொ  
    
டியாத்தேம் யாத்தன்று நட்பே  
5
அவிழ்த்தற் கரிதது முடிந்தமைந் தன்றே.  

என்பது இரவுக்குறி வந்து ஒழுகுங் காலத்துத் தலைமகனது வரவுணர்ந்து,பண்பிலர் என்று இயற்பழித்த தோழிக்கு, அவரோடு பிறந்த நட்புஅழியாத நட்பன்றோ வென்று, சிறைப்புறமாகத் தலைமகள் இயற்படமொழிந்தது.

(ஆசிரியர் பெயர் காணப்படவில்லை)