பக்கம் எண் :


705


     பெருந்தோள்: அன்மொழித்தொகை; மகளிருக்குத் தோள் பெருத்தல் இலக்கணம்.

    செல்வதற்குரிய வழி முரம்பில் இன்றியேயும் புதுவழியையுண்டாக்கிச் சென்றானென்றது பாகனது ஆற்றலைக் கூறியபடி. பழையவழியே செல்லின் நீட்டிக்குமென்று கருதிப் புதுவழிப்படுத்தலின் மதியுடை வலவோயென்றான்.

    “நீ தலைவியின் உயிர் நீங்காது தருதற்குக் காரணமாயினமையின், தேரைமட்டும் தந்தாயல்லை; அவள் உயிரையுந் தந்தாயாகின்றாய்” என்று தலைவன் பாராட்டினான்.

    ஏ:அசை நிலை.

    ஒப்புமைப் பகுதி 1. சேயாறு செல்லுதல்: குறுந். 269:1.

    2. பெருந்தோள்: குறுந். 335:7.

    4-5. முரம்பு கண்ணுடைய ஏகி வழி உண்டாக்குதல்: “முரம்புகண் ணுடைந்த நடவை” (மலைபடு. 432); “முரம்புகண்ணுடையத் திரியுந் திகிரியொடு”(ஐங். 449:1.)

    7. நோயுழந் துறைவி: குறுந். 65:5, ஒப்பு. நோய்: குறுந். 13:4,ஒப்பு. உறைவி: குறுந். 192:2, ஒப்பு.

(400)
  
(இற்செறிக்கப்பட்ட தலைவி, “நாம் தலைவனோடு மெய் தோய்ந்தநட்பு, பின்னர் அவனோடு விளையாடுதலையும் நீக்கியது” என்றுகூறியது.)
 401.    
அடும்பி னாய்மலர் விரைஇ நெய்தல் 
    
நெடுந்தொடை வேய்ந்த நீர்வார் கூந்தல் 
    
ஓரை மகளி ரஞ்சி யீர்ஞெண்டு 
    
கடலிற் பரிக்குந் துறைவனொ டொருநாள் 
5
நக்குவிளை யாடலுங் கடிந்தன் 
    
றைதே கம்ம மெய்தோய் நட்பே. 

என்பது வேறுபாடு கண்டு இற்செறிக்கப்பட்ட தலைமகள் தன்னுள்ளே சொல்லியது.

அம்மூவன்.

     (பி-ம்.) 3. ‘னார்மலர்’; 4. ‘பரக்குங்’; 5. ‘நக்குவளை’, ‘கடிதன்று’6. ‘றைதெமக்கம்ம’, ‘றைதேய்கம்ம’, ‘றைதேயம்மல’, ‘றைதேகாமம்’.

    (ப-ரை.) அடும்பின் ஆய் மலர் விரைஇ - அடும்பினது அழகிய மலரைக் கலந்து, நெய்தல் நெடு தொடை வேய்ந்த-நெய்தலாலாகிய நெடிய மாலையை யணிந்த, நீர் வார் கூந்தல் - நீர் ஒழுகிய கூந்தலையுடைய, ஓரை மகளிர் அஞ்சி -