எ-து இயற்கைப் புணர்ச்சி புணர்ந்துநீங்கும் தலைமகன் ஆயத்
தோடு செல்லும் தலைமகளைக் கண்டு சொல்லியது.
(ப-ரை.) திரையின் ஒலியொடு கலந்து முழவு ஒலிக்குமென்றது
உடன் செல்கின்ற ஆயத்தார் மகிழ்ச்சியரவமும் உழையராய் எதிர்
வருகின்றார் மகிழ்ச்சியரவமும் கூறினவாறு.
குறிப்பு. திரையிமிழ் இன்னிசை அளைஇ-அலை ஒலிக்கின்ற
இனிய ஓசையைக் கலந்து. முழுவு-மத்தளம். மறுகுதொறு-வீதி
தொறும். தொண்டி : மலைநாட்டு நகர்களுள் ஒன்று; ஐங். 178, இதனை
வலியுறுத்தும்; குறுந். 128 : 2 இக்காலத்து அகலப்புழையென
வழங்குமென்பர் ; பதிற். 88 : 21; புறநா. 17 : 13; 48 : 4.
அரிவை-தலைவி. தலைவி தன்னெஞ்சைக் கொள்ளல் : ஐங் 172 : 1., 191 : 5.
இப்பத்தும் (171-80) அந்தாதியாக உள்ளன.
ஆயத்தார் வேறு, உழையர் வேறு. ( 1 )