எ-து 3தாழ்ந்து வரையக்கருதிய தலைமகனைத்தோழி நெருங்கிக்
4கடிதின் வரையவேண்டுமெனச் சொல்லியது.
(ப-ரை.) வலைவர் தந்த கொழுமீன் வல்சிக்கண்ணே பறத்தல்
கெட்ட முதுகுருகு இருக்குமென்றது நொதுமலர்க்கு மகட்பேச
வந்திருக்கின்ற சான்றோர் உளர் என்பதாம்.
இவை பத்தும் சொல்வகையால் தொடர்ச்சி பெறுதலேயன்றிக்
கிளவி வகையால் தொடர்ச்சியுடையவாறும் அறிக.
குறிப்பு. கொழு மீன்-ஒருவகை மீன். சிறுநணி-விரைவிலேயே,
வரைந்தனை கொண்மோ-வரைந்து கொள்வாயாக, வலைவர்-வலை
ஞர் ; கலித் 23 : 17, வல்சி-உணவு, பறைதபு முதுகுருகு-பறக்க
இயலாத கிழ நாரை ; பறை-பறத்தல் ; குறுந். 125 : 5, 128 : 1 ; சீவக.
2537. தொண்டியன்ன இவள் நலனை, சிறுநணி வரைந்தனை
கொண்மோ.
சொல்வகையால் தொடர்ச்சி பெற்றது அந்தாதித்தொடை
எனப்படும்.
(பி-ம்) 1 ‘சிறுநனி? 2 ‘தொழுமீஅ? 3தாழ்ந்து? 4 ‘கடிதினி? ( 10 )
(18) தொண்டிப்பத்து முற்றிற்று.