242

3. குறிஞ்சி

5) வெறிப் பத்து


242. அறியா மையின் வெறியென மயங்கி
   அன்னையு மருந்துய ருழந்துன 1ளதனால்
   எய்யாது விடுதலோ கொடிதே நிரையிதழ்
   ஆய்மல ருண்கண் பசப்பச்
   சேய்மலை நாடன் செய்த நோயே.

  எ-து தலைமகள் அறத்தொடுநிலை நயப்பவேண்டித் தோழி
அவட்குச் சொல்லியது.

 (ப-ரை.) சேய்மலை நாடன் செய்த நோயை அன்னை அறியாது
விடுதல் கொடிது; அறிவிக்கவேண்டு மென்பதாம் எ-று.

  குறிப்பு. வெறி-வெறியாட்டு. அன்னை-செவிலித்தாய்.
எய்யாது-அறியாமல.் சேய்மலை-நெடுந்தூரமுள்ள மலை, நாடன்
செய்த நோயை (நீக்க) அன்னை வெறியென மயங்கித் துயர் உழந்
தனள். தலைவனால் நோயும் பசலையும் உண்டதால் : குறுந். 13 : 4-5;
கலித். 80 : 20-21 ; குறள், 1183.

  (மேற்) மு. இது வெறியென அன்னை மயங்கினமை (தொல்.
களவு. 24, ந.). (பி-ம்.) 1 ‘ளதனான், அறியாது விடுதலோ? ( 2 )