243

3. குறிஞ்சி

5) வெறிப் பத்து


243. கறிவளர் சிலம்பிற் கடவுட் பேணி
   அறியா வேலன் வெறியெனக் கூறும்
   அதுமனங் 1கொள்குவை யனையிவள்
   புதுமலர் மழைக்கண் புலம்பிய நோய்க்கே..

  எ-து தாயுழை அறியாமை கூறித் தோழி வெறி விலக்கியது.

  (ப-ரை.) அறியா வேலன் யாது கேட்பினும் வெறியெனக்
கூறும் : அவனை இதற்கும் கேட்க மனங்கொள்ளா நின்றாய் எ-று.

  குறிப்பு. கறி-மிளகுகொடி. கறிவளர் சிலம்பு : குறுந். 288 : 1;
கநா. 2 : 6; புறநா. 168 : 2 கடவுளைப் பேணி. அனை : தாயை
நோக்கிய விளி. புலம்பிய-வருந்திய. கண் புலம்பிய நோய்-அழுதல்;
மெய்ப்பாடு. இவள் நோய்க்கு வேலன் வெறியெனக் கூறும்.

  (மேற்) மு. தலைவியைத் தலைவற்குக் கொடுக்க வேண்டுமென்
பது படத்தோழி கூறியது (தொல், களவு. 24, இளம்). இது தாயறி
யாமை கூறி வெறி விலக்கியது. (தொல், களவு 23, ந.)
   (பி-ம்.) 1 ‘கொள்வை யன்னையிவள்? ( 3 )