எ-து தலைமகன் சிறைப்புறத்தானாக வெறியறிவுறீஇத் தோழி
வரைவு கடாயது.
(ப-ரை.) கன்னமென்பது நோய்தணித்தற்குப் பண்ணிக்
கொடுக்கும் படிமம். கெழுதகையென்பது உரிமை; இவளை அணங்கி
யோற்கு வெறியாட்டு உரிமையன்றென்பதாம் எ-று
குறிப்பு. கழங்கு-கழற்சிக்காயை, கழங்கு மெய்ப்படுத்தல் : ஐங்.
246 : 2; 249 : 1, 250 : 1. கன்னந்தூக்கி-நோய் தணித்தற்குப்
பண்ணிக் கொடுக்கும் படிமத்தைத் தூக்கி; ஐங். 247 : 2, முருகு
என-முருகக் கடவுளே என்று, அடி, 3 : ஐங். 247; 3. கெழுதகை
கொல்-உரிமையோ; அன்று என்றபடி. இவளை என்றது தலைவியை.
அணங்கியோற்கு-வருத்திய தலைவனுக்கு. அணங்கியோற்குக்
கெழுதகைகொல்; ஆதலின் வெறியாட்டு நிகழுமுன்னம் வரைந்து
கொள்வாயாக என்றபடி.
(பி-ம்.) 1 ‘மொழியு மாகின்’ ( 5 )