எ-து தலைமகட்கு வந்த நோய் முருகனால் தந்தமை இக்கழங்கு
கூறிற்றென்று வேலன் சொன்னானென்பது கேட்ட தோழி அக்கழங்
கிற்கு உரைப்பாளாய்ச் செவிலி கேட்குமாற்றால் அறத்தொடு நிலை
குறித்துச் சொல்லியது.
குறிப்பு. பொய்படுபு அறியாக் கழங்கே-பொய்படுதலை அறியாத
கழங்காயே ; விளி. கட்சி-காட்டுள். கட்சியுள் மயிலாலுதல் : அகநா.
392 : 17. வள்ளியங் கானங்கிழவோன்-வள்ளிக்கொடி படர்ந்த
காட்டையுடையவன்; தலைவன்; குறுந். 216 : 2. வேள்-முருகக்
கடவுள். பூண் தாங்கிளமுலை : தலைவியை, அணங்கியோன்-வருத்
தினவன் கழங்கே, அணங்கியோன் கானங்கிழவோனே,
வேளல்லன்.
(மேற்) மு. இது செவிலி குறி பார்த்தவழிக் கழங்கு முன்னிலை
யாகத் தோழி கூறியது. (தொல். களவு, 24, இளம்.) இது கழங்கு
பார்த்துழிக் கூறியது (தொல். களவு. 23, ந.)
(பி-ம்.) 1 ‘பொய்படு பழியா’ 2 ‘மடமயிலாயநம்’ 3 ‘வளர்ந்த வள்ளி’ ( 10 )
(25) வெறிப்பத்து முற்றிற்று.