268

3. குறிஞ்சி

(27) கேழற் பத்து


268. தாஅ யிழந்த தழுவரிக் குருளையொடு
   1வளமலைச் சிறுதினை யுணீஇக் கானவர்
   வரையோங் குயர்சிமைக் கேழ லுறங்கும்
   நன்மலை நாடன் பிரிதல்
   என்பயக் கும்மோ நம்விட்டுத் துறந்தே..

 எ-து ‘அவன் குறிப்பிருந்தவாற்றால் நம்மைப் பிரிந்து வந்
தல்லது வரையமாட்டான் போன்றிருந்தது? எனத் தலைமகள் கூறக்
கேட்ட தோழி அவட்குத் தலைமகன் சிறைப்புறத்தானாகச் சொல்
லியது.

  (ப-ரை.) தாயிழந்த குருளையோடே தினையை உண்டு கேழல்
உறங்குகின்ற இத்தன்மையையுடைய நாடனாதலால் இவ்வாறு
நிகழ்தல் கூடாதென்பதாம்.

   குறிப்பு. தாயை இழந்த. குருளையொடு-குட்டிகளோடு, உணீஇ-
உண்டு. உயர்சிமை-உயர்ந்த உச்சியின்கண். நன்மலை நாடன்
நம்மை விட்டுத் துறந்து பிரிதல் என் பயக்குமோ.

  (பி-ம்.) 1 ‘வளமலி சிறுதினை யுணீஇய கானவர்? ( 8 )