312

4 பாலை

(32) செலவுப் பத்து


312. அறஞ்சா லியரோ வறஞ்சா லியரோ
   வறனுண் டாயினு மறஞ்சா லியரோ
   1வாள்வனப் புற்ற வருவிக்
   2கோள்வ லென்னையை மறைத்த குன்றே.

    எ-து உடன் போயின தலைமகள் மீண்டுவந்துழி, ‘நின்
ஐயன்மார் பின்துரந்து வந்தவிடத்து நிகழ்ந்தது என்னை? ? என்ற
தோழிக்கு நிகழ்ந்தது. கூறித் தலைமகன் மறைதற்கு உதவி செய்த
மலையை வாழ்த்தியது.

   குறிப்பு. சாலியர் - மிகுக. வறனுண்டாயினும் - வறட்சி யேற்
படினும். வறனுண்டாயினும் அறஞ்சாலியர்: ?வறப்பினும் வளந்
தரும் வண்மையுமலைக்கே? (நன். 28). வாள் வனப்புற்ற - ஒளியால்
அழகு பெற்ற. வாள் போல் வனப்புற்ற எனினுமாம்; கலித். 42 :
11-2; அகநா. 278 : 7; சீவக. 732. கோள் வல் என் ஐயை-பகை
வரைக் கொலை செய்வதில் வல்ல என் தலைவனை; என் ஐ: ஐங்.
110 : 3, குறிப்பு குன்று அறஞ்சாலியர். அறம் சால்க என வாழ்த்
தல் : பெருங். 3.26 : 41. ஐயன்மார் - தமையன் மார்.

   (மேற்.) மு. இடைச்சுரத்துத் தமர் வந்துற்றவழித் தலைவி
கூறியது (தொல். அத். 45, இளம்.). இது நின் ஐயன்மார்
வந்துழி நிகழ்ந்தது என்னென்ற தோழிக்குத் தலைவி தலைவனை
மறைத்த மலையை வாழ்த்தியது (தொல். அகத். 42, ந.) தமருடன்
சென்றவள் அவன்புறம் நோக்கிக் கவன்றரற்றல் (நம்பி. வரைவு. 28)

    (பி-ம்) 1 ‘வாள்வயப்புற்ற? 2 ‘கோள்வருமென்னையை? ( 2 )