317

4 பாலை

(32) செலவுப் பத்து


317. 1சூழ்கம் வம்மோ தோழி பாழ்பட்டுப்
    பைதற வெந்த பாலை வெங்காட்
    டருஞ்சுர மிறந்தோர் தேஎத்துச்
    சென்ற நெஞ்ச 2நீடிய பொருளே

  எ-து தலைமகன் பிரிந்து நீட்டித்துழி நெஞ்சினைத் தூதுவிட்ட
தலைமகன் அது வாராது தாழ்ந்துழித் தோழிக்குச் சொல்லியது.

   குறிப்பு. சூழ்கம். ஆராய்வோம். வம்மோ - வருவாயாக. தோழி:
விளி. பைதற - பசுமையற. பாலை வெங்காடு - பாலை நிலத்துக்
கொடிய காடு; பாலை என்ற மரம் நிறைந்த காடுமாம். பாலை-
வெம்மை; தக்க. 68. தேஎத்து - நீடிய பொருள்- வாராது
காலந்தாழ்த்த காரணத்தை. பொருளைச் சூழ்கம், வம்மோ.

   (மேற்) மு. இது நெஞ்சினைத் தூதுவிட்டுத் தலைவி கூறியது
(தொல். கற்பு. 6, ந.)

   (பி-ம்) 1‘சூழ்க வம்மோ? 2 ‘நீட்டிய பொருளே?, ‘ஈட்டிய
பொருளே? ( 7 )