318

4 பாலை

(32) செலவுப் பத்து


318. ஆய்நலம் 1பசப்ப வரும்படர் நலிய
   வேய்மருள் பணைத்தோள் வில்லிழை நெகிழ
   நசைநனி கொன்றோர் மன்ற விசை நிமிர்ந்
   2தோடெரி நடந்த வைப்பிற்
   கோடுயர் பிறங்கன் மலையிறந் தோரே.

  எ-து ‘நம்மைப் 3பிரியார்? என்று கருதியிருந்த தலைமகள்
அவன் பிரிந்துழி இரங்கிச் சொல்லியது.

   குறிப்பு. ஆய்நலம் - மெலிந்த அழகு. படர் நலிய - துன்பம்
வருத்த. வேய்மருள் - மூங்கிலையொத்த. வில்லிழை - ஒளி பொருந்திய
ஆபரணம். இழை நெகிழ்தல் : ஐங். 315, குறிப்பு. நசை - விருப்பத்தை.
நனி கொன்றோர் - மிகவும் அழித்தவர். விசை - வேகம். எரிநடந்த
வைப்பு - கனல் பரக்கும் இடத்தையுடைய : ஐங். 324 : 1, 326 : 1.
கோடு - சிகரம், பிறங்கல் மலை - செறிந்த மலை. மலையிறந்தோர்
நசை நனி கொன்றோர் மன்ற.

   (பி-ம்) 1 ‘பரப்ப? 2 ?தோடரி? 3 ‘பிரியானென்று? ( 8 )