319

4 பாலை

(32) செலவுப் பத்து


319.கண்பொர விளங்கிய கதிர்தெறு வைப்பின்
   மண்புரை பெருகிய மரமுளி கானம்
   இறந்தன ரோாநங் காதலர்
   மறந்தன ரோதின் மறவா நம்மே.

  எ-து தலைமகன் பிரிந்துழி அவன் உணர்த்தாது பிரிந்தமை
கூறிய தோழிக்குத் தலைமகள் சொல்லியது.

   குறிப்பு. கண்பொர விளங்கிய - கண்ணொளியோடு மாறுபட
விளங்குகின்ற; புறநா 35 : 19. கதிர் தெறுவைப்பு -சூரியன் சுடு
கின்ற இடம். புரை - புழை ; வீடுமாம். மரமுளி கானம் - மரங்கள்
உலர்ந்த காட்டை. மறவாத நம்மைக் காதலர் மறந்தனரோ. ( 9 )