356

4 பாலை

(36) வரவுரைத்த பத்து


356. 1உள்ளுதற் கினிய மன்ற செல்வர்
    யானை பிணித்த பொன்புனை கயிற்றின்
    ஒள்ளெரி மேய்ந்த சுரத்திடை
    உள்ளம் வாங்கத் தந்தநின் குணணே.

    எ-து வினை முற்றி மீண்டு வந்த தலைமகன் தலைவிக்கு அவன்
குணம் புகழ்ந்து கூறியது.

   (ப-ரை) ‘உள்ளம்வாங்கத் தந்த நின்குணன்’ என்றது என்
னுள்ளம் வாங்குதற்பொருட்டு நீ தந்த குணங்கள் எ-று

    குறிப்பு. உள்ளுதற்கு - நினைத்தற்கு. பொன்புனை கயிற்றின்-
பொன்னாற் செய்யப்பட்ட கயிற்றைப் போன்று எரிமேய்ந்த - நெருப்
புத்தின்ற; கலித். 13 : 2 வாங்க - கொள்ள. நின்குணன் கயிற்றின்
உள்ளுதற்கு இனிய.

   (பி-ம்) 1‘உள்ளற்கினிய’ ( 6 )