358

4 பாலை

(36) வரவுரைத்த பத்து


358. கோடுயர் பன்மலை யிறந்தன ராயினும்
    நீட விடுமோ மற்றே நீடுநினைந்து
    துடைத்தொறுந் துடைத்தொறுங் கலங்கி
    1உடைத்தெழு வெள்ள மாகிய கண்ணே.

   எ-து தலைமகள் ஆற்றாமை கண்டு பிரிந்த தலைமகன் வந்தன
னாகத் தோழி சொல்லியது.

  குறிப்பு. கோடு - சிகரம் இறந்தனராயினும் - கடந்தாராயினும்.
நீடு நினைந்து- காலந் தாழ்த்தமையை நினைந்து, துடைத்தொறும்-
துடைக்குந்தோறும். தடுப்பினும் வெள்ளம் உடைத்தல்; நாலடி.
222. கண் நீட விடுமோ.

  (மேற்.) மு. பாலைத்திணைக்கு விரவும் பொருள்களுள் ஒன்றாகிய
தலைவன் மீட்சி கூறிற்று (தொல். அகத். 45, ந) (பி-ம்) ‘உடைத்தரு? ( 8 )