எ-து தலைமகள் மீண்டுவந்துழி அவட்குத் தோழி கூறியது.
குறிப்பு. புள்ளும்-பறவைகளும் ; உம்மை ; உயர்வு சிறப்பு.
பழுனி - நிறைந்து. நிலைஇ-நிலைத்து. நினைத்தொறும்-நினைக்குந்
தோறும். கலிழும்-கலங்குகின்ற. புலம்பின்று- புலம்பியது. தோழி,
நம்மூர் என்னினும் மிகப் புலம்பியன்று.
(மேற்.) மு. தலைவி மீண்டு வந்துழித் தோழி ஊரது நிலைமை
கூறுதல் (தொல். அகத். 39, ந.)
(பி-ம்) 1‘பழூஉ’ 2‘கலங்கின்று’ ( 8 )