எ-து பருவவரவின்கண் தூதாகிவந்த பாணன் கூறியவழித்
தோழி சொல்லியது.
குறிப்பு. பல்லிதழ் உண்கண் ; ஐங். 170 : 4, குறிப்பு. பனியலைக்
கலங்க-பனி அலைத்தலாற் கலங்க. மன்ற-தெளிவுப்பொருளை
உணர்த்துவதோர் இடைச்சொல். மறம்-வீரம். அவர் தகவு என்.
?துறந்தோன்,? ‘குருசில்? ‘அவர்? என்பன ஒருமை பன்மை மயக்கம்,
ஈண்டு ‘பாண? என்னும் விளிப்பெயரை அதிகாரத்தால் வருவிக்க. ( 1 )