474

5. முல்லை

(48) பாணன் பத்து


474. மையறு சுடர்நுதல் விளங்கக் கறுத்தோர்
    செய்யாண் சிதைத்த செருமிகு தானையொடு
    கதழ்பரி நெடுதே ரதர்படக் கடைஇச்
    சென்றவர்த் தருகுவ லென்னும்
    நன்றா லம்ம பாணன தறிவே.

     எ-து பிரிவின்கண் ஆற்றாமைகண்டு, ‘தூதாகிச் சென்று
அவனைக் கொணர்வல்? என்ற பாணன் கேட்பத் தலைமகள் கூறியது.

     குறிப்பு. மை-குற்றம். கறுத்தோர்-பகைவர். செய்யரண்-
செய்த அரணை. தானை-படை, கதழ்பரி-விரைவுடைய குதிரை, அதர்
பட-வழியில் வர. கடைஇ-செலுத்தி. சென்றவர்-பிரிந்து சென்ற
தலைவனை. தருகுவல்-தருகுவேன். என்னும்-என்று கூறுவான்.
பாணனது அறிவு நன்று.

    (மேற்.) மு. இது பாணனைத் தூதுவிட்டுத் தலைவி கூறியது
(தொல். கற்பு. 6, ந.). ( 4 )