475

5. முல்லை

(48) பாணன் பத்து


475. தொடிநிலை கலங்க வாடிய தோளும்
    வடிநல னிழந்தவென் கண்ணு நோக்கிப்
    பெரிதுபுலம் பினனே சீறியாழ்ப் பாணன்
    எம்வெங் காதலொடு பிரிந்தோர்
    தம்மோன் போலான் பேரன் பினனே.

     எ-து பிரிவின்கண் வேறுபட்ட தலைமகள் தலைமகனுழைநின்று
வந்தார் கேட்பத் தன்மெலிவு கண்டு இரங்கிய பாணனைத் தோழிக்கு
மகிழ்ந்து சொல்லியது.

     குறிப்பு. தொடி-வளைகளது. வடிநலன்-மாவடுவின் அழகை.
பாணன் என்தோளும் கண்ணும் நோக்கிப் பெரிது புலம்பினன்.
எம் வெம் காதலொடு-எமது விருப்பம் பொருந்திய அன்பொடு.
தம்மோன்-தம்மவன்; என்றது தலைவனை. போலான்-போல்
இல்லை. ( 5 )