எ-து வரைந்த அணிமைக் கண்ணே புறத்தொழுக்கம் ஒழுகி
வாயில் வேண்டி வந்து தன்மெலிவு கூறிய தலைமகனைத் தோழி
நெருங்கிச் சொல்லியது.
(ப-ரை.) ‘களிற்றெதிர் பிளிற்றும்? என்றது நீ கூறுகின்ற மெலி
வுக்கு மெலிவு கூறுகின்றது இவள் நுதலென்பதாம்.
குறிப்பு. கரும்பின் ஆலை முழக்கிற்கு யானைமுழக்கம் உவமை :
?வேழம் கதழ்வுற்றாங்கு, எந்திரம் சிலைக்கும்? (பெரும்பாண். 259-60).
கரும்பின் எந்திரம் : புறநா. 322 : 7, தேர்வண் கோமாண் -
தேரை அளிக்கும் பாண்டியனது. துறத்தலின் - தலைவியைப் பிரித
லின். பசந்தன்று - பசந்தது.
(மேற்.) அடி, 2 தலைவி அவனூரனையாளென வந்தது; தொல்.
உவம. 23, பேர். மு. தலைவன் அறம் செயற்கும், பொருள் செயற்கும்,
இசையும் கூத்துமாகிய இன்பம் நுகர்தற்கும், தலைவியை மறந்து
ஒழுகுதற்கும், தோழி அலர் கூறுதற்கும் உதாரணமாகக் கூறப்பட்
டது (தொல். கற்பு. 9, 21 ந.) (பி-ம்.) 1 ‘பிளிறும்? ( 5 )