எ-து உணர்ப்புவயின் வாரா ஊடற்கண் புலந்த தலைமகற்குத்
தோழி கூறியது.
(ப-ரை.) ‘கைவண் விராஅன் இருப்பையன்ன? என்றது நினது
இல்வாழ்க்கைக் குரியவாகிய குணங்களால் உயர்ந்தாள் எ-று.
குறிப்பு. விண்டு - மலை. போர்வு : ஐங். 9 : 4, குறிப்பு. விரா
அன் - ஓர் உபகாரி; இவன் மலை விராலிமலை என்று வழங்குகின்றது;
இருப்பை இவனுடைய ஊர்; நற். 260 : 7, 350 : 4, இவள் - இவ
ளால். அணங்குற்றனை - துன்பமுற்றாய். போறி - போன்று இருந்
தாய். பிறர்க்கும் - பிறபெண்டிரிடத்தும் ; உருபு மயக்கம்.
உணர்ப்பு வாயின் வாரா ஊடல் : தொல். கற்பு. 15.
(பி-ம்.) 1 ‘விராலினிருப்பை? ( 8 )