59

(6) தோழிக்கூற்றுப் பத்து


59. கேட்டிசின் வாழியோ 1மகிழ்ந வாற்றுற
  மைய னெஞ்சிற் கெவ்வந் தீர
  நினக்குமருந் தாகிய யானினி
  இவட்குமருந் தன்மை நோமெ னெஞ்சே.

 எ-து தலைமகள் ஆற்றாளாம் வண்ணம் மனைக்கண் வரவு சுருங்
கிய 2தலைமகற்குப் புறத்தொழுக்கம் உளதாகியவழி ஆற்றாளாகிய
தோழி சொல்லியது.

  குறிப்பு. கேட்டிசின்; சின் : முன்னிலையசைச்சொல். ஆற்றுற -
ஆறுதல் அடைய. எவ்வம் - துன்பம். நினைக்கு மருந்தாகிய யானென்
றது களவுக் காலத்துத் தோழியிற் கூட்டம் முதலியவற்றிற்குத் தான்
உதவியாக இருந்ததைக்கருதித் தோழி கூறியது.் மருந்தன்மை-
மருந்தல்லாமையால். நோம் - வருந்தும்.

 (மேற்.) மு. பரத்தையர் மனைக்கண் தங்கி வந்திருந்த தலை
மகனை நெருங்கித் தலையளிக்குமாறு கூறித் தலைமகள்
மாட்டாக்கிக் கொடுத்தற்கண் தோழிக்குக் கூற்று நிகழும் (தொல்.
கற்பு. 9, இளம். ந.)

  (பி-ம்.). 1 ‘மகிழ்ந வாற்றும்? 2 ‘தலைமகற்குத் தேற்றத் தேறாது? ( 9 )