100

(10) எருமைப்பத்து

 


100. புனலாடு மகளிரிட்ட வொள்ளிழை
   மணலாடு சிமையத் தெருமை கிளைக்கும்
   யாண ரூரன் மகளிவள்
   பாணர் நரம்பினு மின்கிள வியளே.

எ-து வாயில் நேர்தற்பொருட்டு முகம்புகுவான் வேண்டி இயற்
பழித்துத் தலைமகள் இயற்பட மொழிந்ததிறம் தலைமகற்குத்தோழி
சொல்லியது.

 (ப-ரை.) மகளிரது மறைந்த இழையை எருமை கிளைக்குமூரன்
மகளென்றது இப்போது வாயில் நேர்தலேயன்றிக் களவுக்காலத்து
நீசெய்த நன்மை மறைந்தனவும் எடுத்துக் கூறினாளென்பதாம்.

  குறிப்பு. புனலாடு மகளிர் இட்ட ஒள்ளிழை-நீராடும் பெண்டிர்
போகட்டுப் போன ஒளியையுடைய ஆபரணங்களை; (ஐங். 122 : 2 );
?புனலாடு மகளிரிட்ட பொலங்குழை? (பெரும்பாண். 312.)
சிமையத்து-உச்சியில். மணலாடுசிமையம் : நற். 260 : 4; குறுந்.
372 : 2-3; அகநா. 190 : 5-7. கிளைக்கும் - கிண்டும் கிளவியள்-
மொழியையுடையவள். பாணர் ...... கிளவியளே : ஐங். 185 : 4. ( 10 )

(10) எருமைப் பத்து முற்றிற்று.

மருதம் முற்றிற்று.

ஓரம்போகியார்.