98

(10) எருமைப்பத்து

 


98. தண்புன லாடுந் தடங்கோட் டெருமை
 திண்பிணி யம்பியிற் றோன்று மூர
 ஒண்டொடி மடமக ளிவளினும்
 நுந்தையும் ஞாயும் கடியரோ நின்னே.

  எ-து புறத்தொழுக்கம் உளதாகிய துணையானே புலந்து வாயில்
நேராத தலைமகள் கொடுமை தலைமகன் கூறக்கேட்ட தோழி
அவற்குச் சொல்லியது.

 (ப-ரை.) இவளினும்......கடியரோவென்றது நின்னிடத்துக் குற்ற
முளதாகியவழிக் கழறுங்கால் இவளினுங் கடியரோ நுந்தையும்
யாயும் எ-று. அவரினும் கடுமையாற் கூறுதற்கு உரியாள் இவ
ளென்பதாம். நீராடும் எருமை பலரும் ஏறுதற்குரிய அம்பிபோலத்
தோன்று மென்றது பலர்க்கும் உரியையாவை யெனப் புலந்தா
ளென்பதாம்.

  குறிப்பு. திண்பிணி அம்பியின்-திண்ணிதாகப் பிணிக்கப்பட்ட
ஓடத்தைப்போல. எருமைக்கு ஓடம் உவமை. மடமகள் என்றது
தலைவியை. கடியரோ-கடுமையை யுடையரோ; அல்லரென்றபடி.

 

 (பி-ம்.) ‘யா யும்’ ( 8 )