82.
|
பகைபெரு
மையிற் றெய்வஞ் செப்ப
ஆரிறை யஞ்சா வெருவரு கட்டூர்ப்
பல்கொடி நுடங்கு முன்பிற் செறுநர்
செல்சமந் தொலைத்த வினைநவில் யானை |
5
|
கடாஅம்
வார்ந்து கடுஞ்சினம் பொத்தி
வண்டுபடு சென்னிய பிடிபுணர்ந் தியல
மறவர் மறல மாப்படை யுறுப்பத்
தேர்கொடி நுடங்கத் தோல்புடை யார்ப்பக்
காடுகை காய்த்திய நீடுநா ளிருக்கை |
10
|
இன்ன
வைகல் பன்னா ளாகப்
பாடிக் காண்கு வந்திசிற் பெரும
பாடுநர், கொளக்கொளக் குறையாச் செல்வத்துச் செற்றோர்
கொலக்கொலக் குறையாத் தானைச் சான்றோர்
வண்மையுஞ் செம்மையுஞ் சால்பு மறனும் |
15
|
புகன்றுபுகழ்ந்
தசையா நல்லிசை
நிலந்தரு திருவி னெடியோய் நின்னே. |
துறை
- காட்சி வாழ்த்து. வண்ணம் - ஒழுகுவண்ணமும்
சொற்சீர்வண்ணமும். தூக்கு - செந்தூக்கு. பெயர் -
வினைநவில் யானை
(4)
(ப
- ரை) 1.
பகை பெருமையின் தெய்வம் செப்பவென்றது
நின்மனத்து அவரோடு பகைத்தன்மை பெரிதாகையானே நின்பகைவர்
நின்னை யஞ்சித் தாம் தாம் வழிபடும் தெய்வத்தைத் தத்தமக்குக்
காவலென்று சொல்லவென்றவாறு.
செப்ப
(1) அஞ்சா (2) என முடிக்க.
2.
ஆர் இறை அஞ்சாக் கட்டூரென்றது வீரர் அரிதாக
இறுத்தலை யஞ்சாத பாசறையென்றவாறு.
பல்கொடி
நுடங்கும் (3) யானை (4) என முடிக்க.
4.
வினை நவில் யானையென்றது முன்பே போர்செய்து பழகின
யானை யென்றவாறு.
இச்சிறப்பானும்
முன்னின்ற அடைச்சிறப்பானும், இதற்கு,
‘வினைநவில் யானை’ என்று பெயராயிற்று.
பிடி
புணர்ந்து இயல (6) என்றது அவ்வினைநவில் யானை (4)
கடாம் வார்ந்து கடுஞ்சினம்பொத்தி (5) அச்சினத்திற்கேற்பப் போர்
பெறாமையிற் பாகர் அதன்சினத்தை அளவுபடுத்தற்குப் பிடியைப்
புணர்க்கையான், அப்பிடியோடு புணர்ந்தும் போர்வேட்டுத்
திரியவென்றவாறு.
7.
மாப் படை உறுப்பவென்றது இன்ன பொழுது
போர்நிகழுமென்று அறியாமையின், குதிரைகள் கலனைக்கட்டி
நிற்கவென்றவாறு.
மாவைப்
படையுறுப்பவென விரித்தலுமாம்.
8.
தேர் கொடி நுடங்கவென்றது தேர் போர்குறித்துப் பண்ணி
நின்று கொடி நுடங்கவென்றவாறு.
தோல்
புடை ஆர்ப்ப வென்றது தோல்களும்
முன்சொன்னவற்றின் புடைகளிலே போர்குறித்த நாளிடத்து
ஆர்ப்பவென்றவாறு.
இயல
(6) மறல உறுப்ப (7) நுடங்க ஆர்ப்ப (8) என்னும்
ஐந்தினையும் பன்னாளாக (10) என்னும் வினையொடு முடிக்க.
9.
காடு கைகாய்த்தியவென்றது பாசறையிருக்கின்ற நாள் குளிர்
நாளாகையால் விறகெல்லாமுறித்துத் தீக்காய்ந்தவென்றவாறு.
காட்டையென
இரண்டாவதனை விரித்து அதனைக்
காய்த்தியவென்பதனுட் போந்த பொருண்மையொடு முடிக்க.
9-10.
நீடுநாளிருக்கையையுடைய இன்ன வைகலென
இரண்டாவது விரிக்க. 10. இன்ன வைகலென்றது இப்பெற்றியையுடைய
பாசறையிருக்கின்ற நாட்களென்றவாறு.
12-3.
செற்றோர் கொலக் கொலக் குறையாத் தானையென்றது
பகைவர் போருட் கொல்லக் கொல்லக் குறைபடாத தானையென்ற
அதன் பெருமை கூறியவாறு.
15.
புகன்று புகழ்ந்தென்பதனைப் புகன்று புகழவெனத் திரிக்க.
அசையா நல்லிசை - கெடா நல்லிசை.
புகழ்க்காரணமாகிய
வண்மை முதலிய குணங்களைச் (14)
சான்றோர் (13) புகன்று புகழ்கையாலே கெடாது நின்ற நல்ல புகழ்
(15) எனக்கொள்க.
நெடியோய்
(16), பெரும (11), கட்டூரிடத்தே (2) நீடுநாளிருக்கை
(9) இன்ன வைகல்தான் பன்னாளானபடியானே (10) நின்னைப் (16)
பாடிக்காண்கு வந்தேன் (11) எனக் கூட்டி வினை முடிவு செய்க.
இதனாற்
சொல்லியது அவன் வென்றிச் சிறப்புக்
கூறியவாறாயிற்று.
(கு
- ரை) 1-9. சேரன்
வாடைப் பாசறைக்கண்
இருத்தல் கூறப்படும்.
1.
நின் மனத்தில் நின் பகைவரோடு பகையாந்தன்மை
பெரிதாகையாலே அவர் நின்னையஞ்சித் தாம் தாம் வழிபடும்
தெய்வங்களைத் தத்தமக்குக் காவலெனச் சொல்ல: “தொழுது
விழாக் குறைக்குத் தொல்கடவுட் பேணி, அழுது விழாக்கொள்வ
ரன்னோ - முழுதளிப்போன், வாணாட் கோள் கேட்ட மடந்தையர்
தம்மகிழ்நர், நீணாட்கோளென்று நினைந்து” (தொல்.
புறத். 13, ந.
மேற்.) என்பதிலும் இக்கருத்து அமைந்துள்ளது. பகை
பெருமையினென்னும் பயனிலை பண்புகொள வருதலின்பாற்படும்.
2.
நின் வீரர் அரிதாக வந்து தங்குதலை அஞ்சாத, பகைவர்
அஞ்சுகின்ற பாசறையில் ; கட்டூர் ; பதிற்.
90 : 30 ; பு. வெ. 53.
3-6.
யானையின் இயல்பு.
4.
வினைநவில் யானை: பதிற். 40 : 31, 84
: 4 ; மதுரைக்.
47 ; நெடுநல். 169 ; மலைபடு
227 ; புறநா. 347 : 11.
3-4.
பலகொடிகள் அசைகின்ற, வன்மையினால் பகைவரது
மிக்குச் செல்கின்ற போர்களைத் தொலைத்த முன்னமே போர்செய்து
பழகிய யானைகள். நுடங்கு யானை, முன்பிற்றொலைத்த யானை
எனக் கூட்டுக.
5-6.
மதம் மிக்கு, மிகுதியான கோபம் மூண்டு, வண்டுகள்
ஒலிக்கின்ற தலையையுடையனவாகித் தம் மதம் தணிதற்குப் பாகர்
பெண் யானைகளைச் சேர்ப்ப அவற்றோடு சேர்ந்திருந்தும் போரை
விரும்பித் திரிய; “மிஞிறார்க்குங் கமழ்கடாத், தயறுசோறு
மிருஞ்சென்னிய, மைந்து மலிந்த மழகளிறு” (புறநா.
22 : 6-8)
7.
வீரர் மாறுபட, குதிரைகள் இன்னபோது போர் நிகழுமென்று
அறியாமையால் கலனை கட்டி நிற்க. 8. தேர் கொடிகள் நின்று
அசைய, கிடுகுபடைகளும் முன் சொன்னவற்றின் பக்கத்தே
போர்குறித்து ஒலிப்ப.
9-10.
குளிரின் மிகுதியால் காட்டிலுள்ள மரங்களையௌல்லாம்
விறகாக எரித்துத் தீக்காய்ந்த, நீண்ட நாளாக இருத்தலையுடைய,
இப்படிப்பட்ட நாட்கள் பல ஆதலால் ; என்றது வாடைப்பாசறையைக்
கூறியபடி.
11.
பெருமானே, நின்னைப் பாடிக் காண்பேன் வந்தேன்.
நின்னைப்
(16) பாடி (11) என இயைக்க.
12.
புறநா. 70 : 7.
12-3.
நின்னைப் புகழ்ந்து பாடுவோர் கொள்ளக் கொள்ளக்
குறையாத செல்வத்தையும் பகைவர் போர்கள்தோறும் கொல்லக்
கொல்லக் குறையாத சேனையையும். 16 :தொல்.
பாயிரம்; சிலப்.
28 : 3.
13-6.
அறிவான் அமைந்தோர், கொடையையும்
நடுவுநிலையையும் சால்பையும் வீரத்தையும் விரும்பிப்புகழ்தலால்,
கெடாத நல்ல புகழையும், பகைவரது நிலத்தைக் கொள்ளுகின்ற
போரால் வரும் செல்வத்தையும் உடைய நெடியோய். புகழ்ந்து -
புகழ ; எச்சத்திரிபு. நிலந்தரு திரு - விளைவெனினுமாம் (சிலப்.
15 : 1, அரும்பத.)
வண்மை
முதலிய குணங்கள் புகழுக்குக் காரணமாயின.
நெடியோய்
(16), பெரும (11), கட்டூரிடத்தே (2) நீடுநாளிருக்
கையையுடைய (9) வைகல் பன்னாளாக (10), பாடிக் காண்கு வந்திசின்
(11) என முடிக்க.
(பி
- ம்) 3. முன்பிற் செல்வர். (2)
|