83.
|
கார்மழை முன்பிற் கைபரிந் தெழுதரும்
வான்பறைக் குருகி னெடுவரி பொற்பக்
கொல்களிறு மிடைந்த பஃறோற் றொழுதியொடு
நெடுந்தேர் நுடங்குகொடி யவிர்வரப் பொலிந்து |
5
|
செலவுபெரி
தினிதுநிற் காணு மோர்க்கே
இன்னா தம்மவது தானே பன்மா
நாடுகெட வெருக்கி் நன்கலந் தரூஉநின்
போரருங் கடுஞ்சின மெதிர்ந்து
மாறுகொள் வேந்தர் பாசறை யோர்க்கே. |
துறை
- தும்பையரவம். வண்ணம் - ஒழுகுவண்ணம்.
தூக்கு - செந்தூக்கு. பெயர் - பஃறோற் றொழுதி (3)
(ப
- ரை) 1. கைபரிதல் - ஒழுங்கு குலைதல்.
1மழைக்கு
ஒப்பாகிய யானைகளோடு தோல்களையும் (3)
2ஒப்பித்துப் பெரியவாகக் கூறிய சிறப்பான் இதற்கு,
‘பஃறோற்றொமுதி’ என்று பெயராயிற்று.
6.
3பன்மாவென்றது பலபடியென்றவாறு. 7. எருக்கல் -
அழித்தல்.
நின்னைக்
காண்பார்க்கு நின்படை செல்கின்ற செலவு (5)
4மழைக் குழாத்தின்முன்பே ஓரொருகால் ஒழுங்கு குலைந்து செல்லும்
(1) கொக் கொழுங்குபோலக் (2) களிறுமிடைந்த பஃறோற்கிடுகின்
தொகுதியோடு (3) தேர்களின் நுடங்குகொடி விளங்காநிற்பப்
பொலிவுபெற்றுப் (4) பெருக இனிது; அவ்வாறு அன்புறுவாரையொழிய
(5) அதுதான் இன்னாது ; யார்க்கெனின் (6), மாறுகொள் வேந்தர்
பாசறையோர்க்கு (9) என வினை முடிவு செய்க.
இதனாற்
சொல்லியது அவன்படைச் சிறப்புக் கூறியவாறாயிற்று.
(கு
- ரை) 1-2. கார்காலத்து மேகக்கூட்டத்தின்
முன்னே
ஒழுங்கு குலைந்து எழுகின்ற, சிறந்த பறத்தலையுடைய கொக்கின்
நீண்ட வரிசையை ஒப்ப. பொற்ப : உவம உருபு.
3-4.
கொல்லும் ஆண்யானைகள் நெருங்கிய பல கேடகங்களின்
தொகுதியோடு, உயர்ந்த தேரில் அசைகின்ற கொடிகள் விளங்கா
நிற்பப் பொலிவு பெற்று.
2-4.
தேர்மீதுள்ள வெள்ளிய கொடிகளுக்குக் கொக்கு உவமை.
5.
நின்னைக் காண்பார்க்கு நினது சேனை செல்லும் செலவு
மிகவும் இனியது. 6. அதுதானே இன்னாதது ஆகும்.
6-7.
பலபடியாக நாடுகள் அழியும்படி சிதைத்து நல்ல
ஆபரணங்களைத் தருகின்ற நினது. ‘பன்மாணாடு’ என்ற பாடம்
சிறக்கும்; பலவாக மாட்சிமைப்பட்ட நாடுகளென்று கொள்க;
“பாடுசா னன்கலந் தரூஉம், நாடுபுறந் தருத னினக்குமார் கடனே”
(பதிற். 59:18-9)
8-9.
போர்செய்தற்கு இயலாத, மிக்க போகத்தை ஏற்றுக்
கொண்டு, நின்னோடு மாறுபாடுகொண்ட அரசருடைய பாசறையிலுள்ள
வீரர்க்கு. பாசறையோர்க்கு (9) இன்னாது (6) என முடிக்க.
(பி
- ம்) 2. போர்ப்ப. 6. அம்மதானே. 6 - 7.
பன்மா, ணாடு
(3)
1“கடாஅ
மாறிய யானை போலப், பெய்துவறி தாகிய பொங்கு
செலற் கொண்மூ”, ‘வயவுப்பிடி யினத்தின் வயின்வயிற் றோன்றி,
இருங்கிளைக் கொண்மூ வொருங்குடன் றுவன்றி” (அகநா.
125 : 8-9,
183 : 8-9)
2ஒப்பித்து
- ஒப்புக்கூறி.
3பன்மாறு
என்பதன் விகாரம் போலும்.
4தோல்களுக்கு
மழை ஒப்பாகக் கூறப்படும் ; “மழையென
மருளும் பஃறோன் மலையெனத், தேனிறை கொள்ளு மிரும்பல்
யானை” (புறநா. 17 : 34 - 5) |