| நெய்தலுங் குவளையு மாம்பலுஞ் சங்கமும் மையில் கமலமும் வெள்ளமு நுதலிய | 15 | செய்குறி யீட்டங் கழிப்பிய வழிமுறை கேழ றிகழ்வரக் கோலமொடு பெயரிய ஊழி யொருவினை யுணர்த்தலின் முதுமைக் கூழி யாவரு முணரா ஆழி முதல்வநிற் பேணுதுந் தொழுதும் | 20 | நீயே, வளையொடு புரையும் வாலி யோற்கவன் இளைய னென்போர்க் கிளையை யாதலும் புதையிரு ளுடுக்கைப் பொலம்பனைக் கொடியோற்கு முதியையென் போர்க்கு முதுமை தோன்றலும் வடுவில் கொள்கையி னுயர்ந்தோ ராய்ந்த | 25 | கெடுவில் கேள்வியு ணடுவா குதலும் |
பரம்பொருளினின்றும் ஆகாயந்தோன்றிஅதனினின்றும் காற்றுத் தோன்றிஅதனினின்றும் தீத்தோன்றி அதனினின்றும் நீர்தோன்றி அதனினின்றும் நிலந்தோன்றிற்றென்று வேதத்துள்ளும்கூறப்பட்டது. 13 - 8. என்றிவ்வூழிகளானேநெய்தலும் குவளையும் ஆம்பலும் சங்கமும் கமலமும்வெள்ளமுமென எண்குறித்திட்ட பெயர்களது அளவிற்றாகியகாலவீட்டம் (பி - ம். காலவட்டம்) கழிந்தபின்உயிர்கள் உளவாதற்பொருட்டு அந்நிலத்தினை எடுத்திட்டகேழற்கோலத்தால் திகழ்வரப் பெயர்பெற்ற இவ்வராககற்பம்நின்செயல்களுள் ஒரு செயலின் பெயராமதனையுணர்த்துதலின்அச்செயல்கள் பலவற்றையுஞ்செய்கின்ற நின்முதுமைக்குள்ளகற்பங்கள் யாவரானும் அறியப்படாத. 20 - 27. அங்ஙனம்முதியையாகிய நீ வாலியோற்கு அவன் இளையனென்று கூறுவோர்க்குப்பிறப்புமுறையால் இளையையாகலும், எல்லாப் பொருள்களையும்மறைக்கும் இருள்போலும் உடுக்கையையுடைய பனைக்கொடியோற்குவாசுதேவமூர்த்தியாகிய நின்கட் சிறப்பு முறையான்முதியையென்போர்க்கு முதுமைதோன்றலும், தவறில்லாதவிரதங்களையுடைய ஞானிகள் ஆராய்ந்த வேதத்தால்தெரிந்துணரின் உயிர்தொறும் உயிர்தொறும் அந்தரியாமியாய்நிற்றலுமாகிய இந்நிலைமைகளும் நின்கட்டோன்றும்நின் தொன்னிலைமைபோல நினக்கேயுள்ள விசேடம். என்றது யாவரும்உணரா முதுமையும் ஒருவற்குப் பின் பிறத்தலும் அவற்குமுன் பிறத்தலும் எக்காலத்தும் எவ்விடத்துமுள்ள உயிர்ப்பொருள்கட்குஉட்பொருளாதலுமாகிய இவ்விரோதத்தின் கண்ணேஉள்ளதென்றவாறு. (பி - ம்.)14''நுதலிச்'' 17 ''யொருவனை'' |