| இந்நிலைத் தெரிபொரு டேரி னிந்நிலை நின்னிலைத் தோன்றுநின் றொன்னிலைச் சிறப்பே ஓங்குயர் வானின் வாங்குவிற் புரையும் பூணணி கவைஇய வாரணி நித்தில | | 30 | நித்தில மதாணி யத்தகு மதிமறுச் செய்யோள் சேர்ந்தநின் மாசி லகலம் வளர்திரை மண்ணிய கிளர்பொறி நாப்பண் வைவான் மருப்பிற் களிறு மணனயர்பு புள்ளி நிலனும் புரைபட லரிதென | | 35 | உள்ளுந ருரைப்போ ருரையொடு சிறந்தன் றொடியா வுள்ளமொ டுருத்தொருங் குடனியைந் திடியெதிர் கழறுங் காலுறழ் பெழுந்தவர் கொடியறு பிறுபு செவிசெவிடு படுபு முடிக ளதிரப் படிநிலை தளர |
26. ''தெரிபொருள்'' என்னும் வினைத்தொகைதெரியும் பொருளென நிகழ்காலத்தான் விரிக்கப்படும்,உயிர்ப்பொருட்கு உணர்தற்பண்பு இயற்கை யாதலின்.இந்நிலையுமென்னும் உம்மை விகாரத்தாற்றொக்கது. 27. ''நின்னிலைத்தோன்றும்'' என்புழி ''நிலை''என்பது இடப்பொருட்டாய் நின்றது. 28 - 35. மிக உயர்ந்தவானின்கண் வளைந்த வில்லையொக்கும் ஏனைப்பூணணிகளால்அகத்திடப்பட்ட அரிய அழகிய நித்திலத்தாற் செய்தநித்தில மதாணியாகிய அழகிய மதிக்கு மறுவெனச்செய்யோள் அடைந்த நின்மார்பு உரையொடு பொருந்திற்றன்று. வளர்திரைப்புனன் மூழ்கியெடுத்தலின்அதனால் மண்ணப்பட்ட கிளர்புகரிடையதாகியமருப்பிற்கொண்டு ஆதிவராகம் மணனயர்தலாற்புள்ளியளவாகிய நிலனும் வெள்ளத்தால்வருந்திற்றில்லையென்று வேதப்பொருளை உட்கொண்டுரைப்போர்உடையொடெனக் கூட்டுக. ஒருத்தியொடுமணனயரும்வழிப் பிறளொருத்தி அகலத்தைச் சேர்தல்கூடாமையிற் சிறந்ததன்றென்றார்; செய்யுள் விகாரத்தால்''சிறந்தன்று'' என நின்றது. 36 - 40. கெடாதமனவெழுச்சியோடு வெகுண்டு உடனியைந்து காற்றை யொத்துஎதிர்ந்த அவுணர் கொடிகள் அற்று இற்றுச் செவிகள்செவிடுபட்டு முடிகள் அதிரப் படிகள் நிலைதளரமிகவும் முழங்குகின்ற நின் சங்கு இடியை யொக்கும். 37. ''எதிர்கழறும்''என்பது உவமைப் பொருட்டு. (பி - ம்.)26''டேரினினனிலை'' 33 ''வைவாண்'' 34 ''புகர்பட'' 8 ''செவிசெவிடுபட'' |