| 40 | நனிமுரல்வளை முடியழிபிழிபு தலையிறுபு தாரொடு புரள நிலைதொலைபு வேர்தூர்மடல் குருகு பறியா நீளிரும் பனைமிசைப் பலபதி னாயிரங் குலைதரை யுதிர்வபோல் | | 45 | நில்லா தொருமுறை கொய்பு கூடி ஒருங்குருண்டுபிளந்து நெரிந்துருள்புசிதறு பளறுசொரிபு நிலஞ்சோரச் சேரா ரின்னுயிர் செகுக்கும் போரடு குருசினீ யேந்திய படையே | | 50 | ஒன்னா ருடங்குண்ணுங் கூற்ற முடலே பொன்னேர் பவிரழ னுடக்கத னிறனே நின்னது திகழொளி சிறப்பிரு டிருமணி கண்ணே, புகழ்சா றாமரை யலரிணைப் பிணையல் வாய்மை வயங்கிய வைகல் சிறந்த | | 55 | நோன்மை நாடி னிருநிலம் யாவர்க்கும் |
40. ''முரறல்'' உயிருள்வழி அடையாய்வந்தது. 40 - 49. நின்றநிலையில்தொலைந்து வேரும் தூரும் மடலும் குருத்தும் பறியாதநீண்ட கரிய பனைமிசைப் பலபதினாயிரங்குலைகள்அதன் தலையினீங்கித் தரைக்கண் உதிர்வனபோலத்தலைகள் வலியழிந்து சாய்ந்து ஒன்றும் உடன்மிசைநில்லாமற் கொத்தாக இற்றுத் (பி - ம்.விதறித்)தரித்த தாரொடு புரளும்படி ஒரு காலத்திலே கொய்தல்பெற்றுஉடனே உருண்டு பிளந்து நெரிந்துபின் வேறுவேறாய்உருண்டு சிதறி அளறு சொரிந்து நிலத்தின்கட் சோரஅவுணருயிரைச் செகுக்கும், நீ ஏந்திய ஆழிப்படை. 43. பறியாப்பனை எனச் சினைவினைமுதன்மேனின்றது. 50. ஒன்னாரை உடங்குண்ணும் அப்படையின்உடல் கூற்றத்தையொக்கும். 51. அதன் நிறம்,சுடுகின்ற பொன்னோடு எழுந்து விளங்குகின்ற அழல்நுடக்கத்தையொக்கும். 52. நின் ஒளி, சிறப்பினையுடையஇருண்ட நீலமணியை ஒக்கும். 53. நின் கண், தாமரையலர்இரண்டைப் பிணைத்தனை ஒக்கும். 54. நின்வாய்மை, தப்பாது வருகின்ற நாளை ஒக்கும். 55. நின்பொறை,நிலத்தையொக்கும். (பி - ம்.)44''தலைத்தரை'' 51 ''நுடக்கத்தினிறறெ'', ''நுடக்கினிறறெ''52 ''பிருட்டிரு'' |