| கடையழிய நீண்டகன்ற கண்ணாளைக் காளை படையொடுங் கொண்டு பெயர்வானைச் சுற்றம் இடைநெறித் தாக்குற்ற தேய்ப்ப வடன்மதுரைமேந்துவோர் ஆடற்கு நீரமைந்த தியாறு; |
| 50 | ஆற்றணி வெள்வாள் விதிர்ப்போர் மிளிர்குந்த கொள்வார்கோல் கொள்ளக் கொடித்திண்டே ரேறுவோர் புள்ளேர் புரவி பொலம்படைக் கைம்மாவை வெள்ளநீர் நீத்தத்துளூர்பூர் புழக்குநரும் கண்ணாருஞ் சாயற் கழித்துரப் போரை |
| 55 | வண்ணநீர் கரந்த வட்டுவிட் டெறிவோரும் மணம்வரு மாலையின் வட்டிப் போரைத் துணிபிணர் மருப்பி னீரெக்கு வோரும் தெரிகோதை நல்லார்தங் கேளிர்த் திளைக்கும் உருகெழு தோற்ற முரைக்குங்கா னாளும் |
| 60 | பொருகளம் போலுந் தகைத்தே பரிகவரும் பாய்தேரான் வையை யகம்; நீரணி வெறிசெறி மலருறு கமழ்தண் |
46 - 9. எல்லையற நீண்டு அகன்றகண்ணாளை உடன்கொண்டு படையொடும் பெயர்ந்ததலைவனை அவள்சுற்றம் இடைச்சுரத்துச் சென்றுபொருதாற்போல வெற்றியையுடைய மதுரையார் இடையேபுகுந்து நீராடுதற்கு ஏற்றது யாறு.
50. வாளும் குந்தமும்கிடைமுதலியவற்றான் அமைக்கப்பட்டன.
51. கொள்வாரெனப் பொதுப்படக்கூறியவதனான் மகளிர் தேர்க்கு மகளிரும்மைந்தர்தேர்க்குப் பாகரும் கோல்கொள்ளவென்பதுபெற்றாம்.
52-3. வெள்ளநீராழத்துள் இவற்றைஊர்ந்தூர்ந்து.
54 - 9. கண்ணுக்கு ஆரும் அழகையுடையமூங்கிற்கழியால் நீரைத் துரப்போரைஅரக்குநீரையடக்கிய வட்டால் எறிவோரும்மாலையினாற் சுழற்றியெறிவோரை அற்ற பிணரையுடையகொம்பினீரால் எக்குவோருமாய்த் தம் கேளிரொடுநாளும் திளைக்கும்.
இது காரின்கண் ஆடல். மேல்இளவேனிற்காலம்.
62 - 71. நீராடற்கமைந்தஅணியினையுடைய அகலத்து அவ்வழகிய ஒப்பனையையும்அதற்கேற்ற இழைகளையுமுடைய அரிமாலையவரோடுநல்வளம் தருகின்ற புண்ணியத்தைச் செய்த நாகரைப்போல இடைவிடாது இறுகப்புணர்தற்குப் பாகுதங்கியஇளமதுவை நுகர்ந்து களிமிக்குத் தாளமமைந்தபாடலின்பத்தால் தங்கள் செவியை நிறைத்துத் தம்அழகாகிய மதுவை ஒருவரினொருவர் கண்ணாலுண்ணஉம்பருறையும் ஒளிகிளர் வானத்தின்கண்வைமானிகர் ஊர்ந்துதிரியும் விமானங்களைக்காட்டும் நீரோட்டத்தை (பி - ம். நீரோடத்தை)யுடைத்து அவ்வையையகம்.
___________________
(பி - ம்.)46 ''கண்ணளை'' 47 ''பெயவாளை''55 ''வணநீர்''