| தார்வாரை யகலத்தவ் வேரணி நேரிழை ஒளிதிகழ்தகை வகைசெறி பொறி |
| 65 | புனைவினைப்பொலங் கோதை யவரொடு பாக ரிறைவழை மதுநுகர்பு களிபரந்து நாகரினல் வளவினை வயவேற நளிபுணர்மார் காரிகைமது வொருவரினொருவர் கண்ணிற் கவர்புறச் சீரமை பாடற் பயத்தாற் கிளர்செவிதெவி |
| 70 | உம்ப ருறையு மொளிகிளர்வா னூர்பாடும் அம்பி கரவா வழக்கிற்றே யாங்கதை காரொவ்வா வேனில் கலங்கித் தெளிவரல் நீரொவ்வா வையை நினக்கு; கனைக்கு மதிர்குரல் கார்வான நீங்கப் |
| 75 | பனிப்படு பைதல் விதலைப் பருவத்து ஞாயிறு காயா நளிமாரிப் பிற்குளத்து |
ஐம்புலன்களாலும் இன்பம்நுகர்தற்கு இடனாயிற்றென்றவாறு.
64-5. ஒளிதிகழாநின்ற கட்டுதல்வகைமை செறிந்த மூட்டுவாய் புனைந்த தொழிலையுடையஅரிமாலையென்க.
வினைத்தொகை அடுக்கு.
பரந்து (66) தெவி (69) என்னும்செய்தெனெச்சங்கள் கவர்புற (68) என்னும்வினைமுதல்வினைகொள்ள அச்செயவெனெச்சம்வழக்கிற்று (71) என்னும் பிறவினைகொண்டது.
71. ஆங்கு அதையென்பன அசை.
இத்துணையும் வையையைப்படர்க்கையாக்கிக் கூறி மேல் எதிர்முகமாக்கி.
72 - 3. வையாய்! இவ்வாறுகார்காலத்துக்கலங்கி வேனிற்காலத்துத்தெளிதலான் இந்நீர்மை எஞ்ஞான்றும்ஒத்திருக்கின்றதில்லை.
எனப் பழிப்பாள்போலப்புகழ்ந்து மேல் தைந்நீராடல் கூறுகின்றாள்:-
74-7. கார்வானம் அதிர்குரல்நீங்கப் பனிமிகுதலாற் குளிரால் நடுங்குதலையுடையமுன்பனிப்பருவத்து ஞாயிறுதெறாத கடைமாரியையுடையமார்கழிமாதத்துத் திங்கள் மறுவொடுநிறைந்ததிருவாதிரை நாளின்கண்.
_________________________
(பி - ம்.)64-5. ''பொறிபுனை'' 67''நனிபுணர்மார்''