| மாயிருந் திங்கண் மறுநிறை யாதிரை விரிநூ லந்தணர் விழவு தொடங்கப் புரிநூ லந்தணர் பொலங்கல மேற்ப |
| 80 | வெம்பா தாக வியனில வரைப்பென அம்பா வாடலி னாய்தொடிக் கன்னியர் முனித்துறை முதல்வியர் முறைமை காட்டப் பனிப்புலர் பாடிப் பருமண லருவியின் ஊதை யூர்தர வுறைசிறை வேதியர் |
| 85 | நெறிநிமிர் நுடங்கழல் பேணிய சிறப்பிற் றையன் மகளி ரீரணி புலர்த்தர வையை நினக்கு மடைவாய்த் தன்று மையாட லாடன் மழபுலவர் மாறெழுந்து |
திருவாதிரை நிறைமதிநாளாங்கால்ஆதித்தன் பூத்தடத்தின்கண்
(பி - ம். பூராடத்தின்கண்)நிற்குமாதலின் அதனையுடைய மார்கழி மாதம்குளமெனப்பட்டது.
78. ஆகமங்களையுணர்ந்த பூசகர்அத்திருவாதிரைக்குத் தெய்வமாகிய இறைவனுக்குவிழாவைத் தொடங்க .................. ..................
80. வெம்பாதாக - மழையாற்குளிர்வதாக.
81-7. அம்பாவாடலையுடைய கன்னியர்சடங்கறிந்த முதுபார்ப்பனிமார்நோற்குமுறைமைகாட்டப் பனியையுடைய புலர்தற்கண்ஆடிப் பருமணலையுடைய ஒழுகுகின்ற நீரின்கண்ணேகுளிர்வாடை வீசுதலான் நின்கரைக்கண் உறையும்அந்தணரது வேதநெறியால் வளர்ந்த நுடங்கழலைப்பேணிய சிறப்புடனே அவ்வொப்பனையையுடைய மகளிர்சென்று அதன்கண் தம் ஈரவணியைப் புலர்த்தாநிற்கஅவ்வந்தணர் அவ்வழற்கட்கொடுக்கும் மடைவையாய் நினக்கு வாய்ப்புடைத்தாயிருந்தது.
81. அம்பாவாடலென்றுதைந்நீராடற்குப் பெயராயிற்றுதாயோடாடப்படுதலின்.
83. புலர்தற்கண் என்னும் ஏழனுருபுதொக்கு நின்றது.
இம்மை யின்பங்குறித்துக்கன்னியர் தைந்நீராடலும் மறுமையின்பங்குறித்து..................கிய இவை நினக்கன்றுஏனையா..................வென்றது.
88 - 92. மையோலை பிடித்த இளையபுலவரது விளையாட்டிற்கு மாறாயெழுந்து காமக்குறிப்பில்லாத விளையாட்டைச் செய்கின்றஆயத்தினையுடைய அம் மகளிர்நீர்க்கண்..................புலன்களடக்கிச் செய்யுந்தவத்தை முன் அடுத்தடுத்துச் செய்தோ தாயருகாகநின்று தவமாகிய தைந்நீராடலை நின்கட் பெற்றது?
88. கல்வி தொடங்கின அளவாதலின்'மழபுலவர்'' என்றார்.
___________________
(பி - ம்.)77 ''மறைநிறை'' 81''வாடியவாய்தொடிக்''