| பொய்யாட லாடும் புணர்ப்பி னவரவர் |
| 90 | தீயெரிப் பாலுஞ் செறுதவமுன் பற்றியோ தாயருகா நின்று தவத்தைந்நீ ராடுதல் நீயுரைத்தி வையை நதி; ஆயிடை மாயிதழ் கொண்டோர் மடமாதர் நோக்கினாள் வேயெழில் வென்று வெறுத்ததோ ணோக்கிச் |
| 95 | சாய்குழை பிண்டித் தளிர்காதிற் றையினாள் பாய்குழை நீலம் பகலாகத் தையினாள் குவளை குழைக்காதின் கோலச் செவியின் இவள்செரீஇ நான்கு விழிபடைத்தா ளென்று நெற்றி விழியா நிறைத்திலக மிட்டாளே |
| 100 | கொற்றவைகோ லங்கொண்டோர் பெண்; பவள வளைசெறித்தாட் கண்டணிந்தாள் பச்சைக் குவளைப் பசுந்தண்டு கொண்டு; கல்லகா ரப்பூவாற் கண்ணி தொடுத்தாளை நில்லிகா வென்பாள்போ னெய்தற் றொடுத்தாளே |
| 105 | மல்லிகா மாலை வளாய்; |
93. ஆயிடை - அவராடுதற்கண்.
93 - 6. வேயழகைவென்று மிக்கதோளழகை........யு........நீலத்தைச் செவித்தாராகஅணிந்து ஒரு மடமாதைப் பார்த்தாள்; அவள்குறிப்பறிந்து அப்பொழுது அம்மாது குழைத்த பிண்டியதுசாய்ந்த தளிரைத் தன்காதின்கண் அணிந்தாள்;அணிகின்றாள் அப்பாய்குழையையுடையாள் அணிந்தநீலமெல்லாம் அத்தளிரின் செம்மையால்இளவெயிலாம்படி யணிந்தாள்.
97 - 8. குழைக்காதினையுடையகோலச்செவிக்கட் குவளையை இவள் செருகி.
99. திலகம் செம்மையால்நெருப்பாகிய நெற்றிவிழியாயிற்று.
100. கொற்றவை கோலங்கொண்டதுஅவற்றின் மிக்க விழி காட்டுதற்கு.
101 - 2. பவளவளையைக் கையிற்செறித்தாளொருத்தியைக் கண்டு வேறொருத்திகுவளைப்பூவினது மரகதம்போலும்பச்சைத்தண்டைக்கொண்டு தன் கையை யணிந்தாள்.
103. கல்லகாரம் - குளிரி. 104.நில்லென்பாள் போல்
இகவென்னுமசை இகாவெனஈறுதிரிந்தது.
104 - 5. வேறொருத்தி மல்லிகைமாலையின்கண் நெய்தலைவிரவித்தொடுத்தாள்.
____________________
(பி - ம்.)93 ''கொண்டுநேர்மடமாதர்'' 95 ''சாய்குழைப்பிண்டித்'' 101 ''டண்டணிந்தாள்''102 ''குவளைத்தண்டு'' 105 ''வாளாய்''