பக்கம் எண் :

129

தண்டு தழுவாத் தாவுநீர் வையையுட்
கண்ட பொழுதிற் கடும்புனல் கைவாங்க
நெஞ்ச மவள்வாங்க நீடு புணைவாங்க
நேரிழை நின்றுழிக் கண்ணிற்ப நீரவன்
110தாழ்வுழி யுய்யாது தான்வேண்டு மாறுய்ப்ப
ஆயத் துடனில்லா ளாங்கவன் பின்றொடரூஉத்
தாயத் திறமறியா டாங்கித் தனிச்சேறல்
ஆயத்திற் கூடென் றரற்றெடுப்பத் தாக்கிற்றே
சேயுற்ற கார்நீர் வரவு;
115நீதக்காய் தைந்நீர் நிறந்தெளிந்தா யென்மாரும்
கழுத்தமை கைவாங்காக் காதலர்ப் புல்ல
விழுத்தகை பெறுகென வேண்டுது மென்மாரும்
பூவீ ழரியிற் புலம்பப் போகா
தியாம்வீழ்வா ரேம மெய்துக வென்மாரும்
120கிழவர் கிழவிய ரென்னாதேழ் காறும்
மழவீன்று மல்லற்கேண் மன்னுக வென்மாரும்

மேல் அவர் கருத்தும்வேண்டிக்கோடலும் கூறுகின்றாள்:

106-14. பண்டு ஒருவன் வையையுள்வாழைத்தண்டைத் தழுவி ஆடாநிற்க ஒருத்தியைக்கண்டான்; கண்டபொழுதிலே அவன் நெஞ்சு அழிதலாற்புனல் கையை வலிக்க. புணை தன்னை நெடுந்தூரம்வலிக்க நீர் அவன் விரும்பின அவளிடத்துக்கொண்டு செல்லாதே........அவள் தான் அதனைக்கண்டுஅவன் பின் தொடர தாய் அவ்வன்புடைமையை அறியாதேதனிச்சேறலை விலக்குதலால் அவள் அரற்றும்படிகரையைப் பொருது வந்தது சிவப்புற்ற கார்காலத்துநீர் வரவு.

115. அந்நீர்போலாது தைந்நீரேயாம் ஆடுமளவினையாய் நிறந்தெளிந்தாய்; அதனால்நீ தக்காயென்பாரும்.

117. விழுத்தகை - வீறு.

118. அரி - வண்டு. யாம் புலம்பப்பிரியாது.

120 - 21. எம் கணவரும் யாமும் கிழவர்கிழவியரெனப்படாமல் நிலையுறுதலையுடைய இளமையைஇத்தவம் தரச் செல்வத்தோடும் சுற்றத்தோடும்நிலைபெறுக வென்பாருமாக.

121. ''மல்லற்கேள்'' என்பதுஉம்மைத்தொகை. ஆகவென்பது வருவிக்கப்பட்டது.

இனி ஒருவன் உவந்தவை காட்டுதல்கூறுகின்றாள்:-
_______________________

(பி - ம்.)108 ''நீடுர்புனை'' 113''தாங்கிற்றே'' 115 ''யென்மார்'' 116 ''தழுத்தமை'' 117''மக்கள் பெறுகென'' 118 ''புலம்பும்போகாது'' 120''ரென்குகெழ''