| 55 | சாய னினது வானிறை யென்னும் நாவ லந்தண ரருமறைப் பொருளே அவ்வும் பிறவு மொத்தனை யுவ்வும் எவ்வயி னோயு நீயே | | 60 | செவ்வா யுவணத் துயர்கொடி யோயே கேள்வியுட் கிளந்த வாசா னுரையும் படிநிலை வேள்வியுட் பற்றியாடு கொளலும் புகழியைந் திசைமறை யுறுகனன் முறைமூட்டித் திகழொளி யொண்சுடர் வளப்பாடு கொளலும் | | 65 | நின்னுரு புடனுண்டி |
55 - 7. யாவர்க்குமொத்தநின் அருள், நீரால் நிறைந்த மேகத்தை ஒக்குமென்றுஉணர்த்தும், அருமறைப்பொருள். 50 - 55. ''ஒக்கும்'' என்னும் உவமச்சொல்வருவித்துரைக்கப்பட்டது. 58 - 9. யாம் சொல்லிய அப்பொருள்களையும்சொல்லாத பிறவற்றையும் பண்புகளானும் தொழில்களானும்ஒத்தனை; ஒத்தும் ஒப்பின்றி எப்பொருளின் அகத்தாயும் நீ. 58. உகரச்சுட்டுச் சொல்லுளடங்காது குறிப்புளடங்கிய . . . . . .ஆயிடை யிரண்டினும் அடங்காதவற்றின் மேற்று. 61 - 8. வேதத்துட்சொல்லப்பட்ட வேள்வி முதல்வன் சொல்லும், படிகால்முறையான் ஒன்றற்கொன்று உயர்ந்தவிகுருதிவேள்வியுள் யூபமாய்ப் பசுவைப் பற்றிக்கோடலும்,செய்தாரின்மையின் உலகச் சொலன்றென . . . . தீதியிசைக்கின்றமந்திரங்களான் உயர்ந்த எரியை முறையாற் கடைந்துஅத்திகழொளியையுடைய ஒண்சுடரினது பெருக்கத்தையுண்டாக்கிக் கோடலுமாகிய இவை, முறையே நின்உருபும், நின் உண்டியும், கடவுள் இல்லையென்பார்உடம்படுதலுண்டாகவும், நின் பெருமைக்குத் தகவும் அந்தணர்காண்கின்ற நின் வெளிப்பாடுமாம். 61. ''கேள்வியுட்கிளந்த'' என்பது ''ஆடுகொளல்'', ''வளப்பாடு கொளல்'' என்பனவற்றோடுமியையும்,அவையும் அதனுட் சொல்லப்பட்டமையின். 65. ஒடுவின் பொருட்டாகலின்,ஈண்டு எண்ணின்கண்வந்த உடனென்பது ஏனைய இரண்டிடத்தும்கூட்டி உரைக்கப்பட்டது. வேள்விக்கிறைவனை''ஆசான்'' என்றார் தலைமைபற்றி. அவனுரையாவது வேதத்துள்நான்காம் வேற்றுமையை ஈறாகவுடைய தெய்வப் பெயர்ச்சொல்.அதனை வைதிகர் உத்தேசத்தியாகமென்ப. அச்சொல்லே(பி - ம்அச் சொல்லோடே) கடவுட்கு உருவென்பதுசயிமினியாற் (பி-ம்.சயமுனியாற்) செய்யப்பட்டவைதிக (பி - ம்.)62''கோடலும்'' 63 ''மூட்டத்'' 64 ''கோடலும்'' |