பக்கம் எண் :

14

பிறருடம் படுவாரா
நின்னொடு புரைய
அந்தணர் காணும் வரவு
வாயடை யமிர்தநின் மனத்தகத் தடைத்தர
70மூவா மரபு மோவா நோன்மையும்
சாவா மரபி னமரர்க்காச் சென்றநின்
. . . . . . . . . மரபினோய் நின்னடி
தலையுற வணங்கினேம் பன்மாண் யாமும்
கலியி னெஞ்சினே மேத்தினேம் வாழ்த்தினேம்
75கடும்பொடுங் கடும்பொடும் பரவுதும்
கொடும்பா டறியற்க வெம்மறி வெனவே
கடவுள் வாழ்த்து 2நன்னாகனாரிசை
1கீரந்தையார் பாட்டு 3பண்ணுப் பாலையாழ்


நூற்றுணிபாகலின் அதனை ''உருபு'' என்றும்,யூபமாவது மாயோனாகச் சொல்லப்படுதலால் பசுக்களைப்பிணித்துக்கொள்கின்ற அதனை ''உண்டி'' என்றும், ஊன்கணார்க்குப்படிமையினும் அந்தணர்க்கு வேள்வித்தீயினும்யோகிகட்கு உள்ளத்தினும் ஞானிகட்கு எவ்விடத்தும்வெளிப்படுதலாற் சுடர்வளப்பாடு கோடலை ''அந்தணர்காணும்வரவு'' என்றும் கூறினார்.

69-75. அமரர்க்குணவாகியஅமிர்தத்தைக் கடைந்துகொடுப்பதாக நின்மனத்தின்கண்நினைந்த அளவிலே அவர்க்கு அதன்பயனாகிய மூவாமரபும்ஒழியாவலியும் தம் சாவாமரபுபோல உரியவாயின; ஆகவேநின் பல்புகழ் பரந்தன; அதனால் அத்தன்மைத்தாகியஅரிய மரபினோய்! நின் அடியை யாமும் துளக்கமில்நெஞ்சினேமாய் வணங்கிப் பலகாலும் ஏத்திவாழ்த்தி வேண்டிக்கோடும்.

69. வாயின்கண்அடுக்கப்படுதலின், உணவிற்கு ''வாயடை'' என்று பெயராயிற்று.

75. ''கடும்பொடும்கடும்பொடும்'' என்னும் அடுக்கு, பன்மைக் கண் வந்தது.

76. எம்மறிவு கொடும்பாடறியற்கவெனமெய்யுணர்வினையே வேண்டினார், வீடு அதனாலல்லது எய்தப்படாமையின்.

(பி - ம்.) 66''ருடம்பாடுவாரா'' 68 ''காணின்'' 69 ''தடைதர'' 70 ''மரபினோவாநோன்மைச்'' 73 ''பலமாபனமா யாண்டுங்'' 1 .......னார்பாட்டு 2''மருத்துவனல்லச்சுவனாரிசை'' 3 ''பண்ணுக்குறிஞ்சியாழ் பண்ணுப் பாலையாழ்''