பக்கம் எண் :

2

அந்தணர்களாற் காக்கப்படும் அறமும், அன்பர்களுக்குஅன்பும் நீ. நெறியில்நில்லாதாரைத் திருத்தி ஆட்கொள்ளும் மறக்கருணையும்பகைவர்களுக்குச் செய்யும் வருத்தமும் நீ. வானத்தில்திகழும் திங்களும் கதிரவனும் நீ. ஐந்து திருமுடிகளையுடையஈசனும் அவனால் உண்டாகும் சங்காரமும் நீ. வேதமும்,பிரமனும், படைத்தலாகிய தொழிலும் நீ. மேகமும் வானமும்நிலமும் இமயமலையும் நீ.

இங்ஙனம் பல பொருளாயிருத்தலினால்,இன்னாரை ஒத்தாய், இத்தகையை என்று நினக்கு உவமைகூறத் தகுவோரை யாம் காணேம்; பொன்னாலழகுபெற்றசக்கரப்படையை வலத்தே யேந்திய நீ எல்லா உயிர்கட்கும்முதல்வனாயுள்ளாய். நின் புகழோடு விளங்கி நீநின்னையே ஒக்கின்றாய்.

நின்னைப்போன்ற புகழையுடையை; பொன்னாடையையுடையை;கருடக்கொடி, சங்கு,பகைவரை யழிக்கும் சக்கரப்படை, நீலமணி போன்றதிருமேனி, எண்ணிறந்த புகழ், அழகிய மார்பு ஆகியஇவற்றையுடையை.

இங்ஙனம்புகழ்ந்து, எம் சுற்றத்தாரோடு நின் திருவடிக்கண்பொருந்தி என்றும் விளங்குக வென்று, நின்திருவடியைத் தொழுது பரவுகின்றோம்;அருள்புரிவாயாக.

1(1)ஆயிரம் விரித்த வணங்குடை யருந்தலை
தீயுமிழ் திறனொடு முடிமிசை யணவர
மாயுடை மலர்மார்பின் மையில்வால் வளைமேனிச்
சேயுயர் பணைமிசை யெழில்வேழ மேந்திய
5வாய்வாங்கும் வளைநாஞ்சி லொருகுழை யொருவனை;

(இது தரவு)


1 இந்நூற் பரிசோதனைக்குக் கிடைத்தவைமுதலிலும் இறுதியிலும் இருக்கவேண்டிய ஏடுகளில்லாமலும்இடையிலுள்ளவை தேய்ந்தும் ஒடிந்தும் இராமபாணவாய்ப்பட்டும் பழுதுற்றிருந்த பழம்பிரதிகளாதலின்,அவற்றிற் காணப்படாமல், கட்டுரை வகையின்என்னும் தொல்காப்பியச் செய்யுளியற் சூத்திரவுரையில்(119) இளம்பூரணவடிகள்காட்டிய மேற்கோள்களிற்காணப்பெற்ற இப்பாடல் மிகச் சிதைந்திருந்தஉரைப்பகுதியால் இந்நூலின் முதற்செய்யுளென்று அறியப்பெற்றுத்தமிழ்த்தெய்வத்தின் திருவருட்செயலை நினைந்துஇன்புற்று இங்கே பதிப்பிக்கலாயிற்று.

(பிரதி பேதம்)2 ''திறலொடு'' 3 ''வாயுடை'' 4 ''பனைமிசை யெழின் மேழியேந்திய''