| சுடுபொன் ஞெகிழத்து முத்தரிசென் றார்ப்பத் துடியி னடிபெயர்த்துத் தோளசைத்துத் தூக்கி | 20 | அடுநறா மகிழ்தட்ப வாடுவா டகைமையின் நுனையிலங் கெஃகெனச் சிவந்த நோக்கமொடு துணையணை கேள்வனைத் துனிப்பவ ணிலையும் நிழல்காண் மண்டில நோக்கி அழல்புனை யவிரிழை திருத்துவாள் குறிப்பும் | 25 | பொதிர்த்த முலையிடைப் பூசிச் சந்தனம் உதிர்த்துப் பின்னுற வூட்டுவாள் விருப்பும் பல்லூ ழிவையிவை நினைப்பின் வல்லோன் ஓவத் தெழுதெழில் போலு மாதடிந் திட்டோய்நின் குன்றின் மிசை; | 30 | மிசைபடு சாந்தாற்றி போல வெழிலி இசைபடு பக்க மிருபாலுங் கோலி விடுபொறி மஞ்ஞை பெயர்புட னாட விரல்செறி தூம்பின் விடுதுளைக் கேற்ப |
18. ஓடவைந்த பொன்னாற் செய்தசிலம்பில் முத்தாகிய அரி எங்குங் கேட்ப ஆர்ப்ப.19. அடியினைத் துடியொலிக்கு இயைய 20. அடுநறாவுண்ட மகிழ்ச்சி தடுப்பஆடுவாள் அழகுகாரணமாக. 22. துனித்தலாவது இவளழகு எமக்குங் கூடவியப்பாயிற்று இனி இவற்குச்சொல்லவேண்டுமோவென உட்கொண்டு கேள்வன்துணையாய் அமரா நிற்கவும் அவனை வெகுளிமிக்கநோக்கமொடு துனித்தல். 23. இவளினும் எனக்கு அழகுண்டாயவழி இவளைநோக்கானென்று கருதிக் கண்ணாடியை நோக்கி. 24.அழல்போல் அவிராநின்ற இழை. 25 - 6. பொங்கின முலையிடத்தேசந்தனத்தைப் பூசியுதிர்த்து நாற்றம்நிலைபெற்றவழி என்னைத் தழுவுமென்று கருதி அதனைப்பின்னும் பின்னும் ஊட்டுவாள். 27. மற்றும் இத்தன்மைய இத்தன்மையபலமுறை நிகழ்கின்ற மகளிர் தொழில்களைநினைப்பின் கைவல்லானெழுதிய ஓவியத்து அழகுபோலும். என்றார் அவ்வொரு தொழிற்கண்ணேநிற்றலான். 30 - 32. மேலெடுத்துக் காட்டப்பட்டசாந்தாற்றிபோல எழிலியிசை யொலிக்கின்றஇடத்து இரண்டு இறகையும் விரித்து விளங்கும்பொறியையுடைய மயில்கள் எழுந்து ஆட. 33. விரல் செறிந்து விடுகின்ற வங்கியத்தின் துளைக்கு இசைய. (பி - ம்.) 21 ''நனையிலங்கெஃகின்'' 31 ''இசைபக்கலிருபாலும்'' |